5 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் அமைப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். படம்: ம.பிரபு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். படம்: ம.பிரபு

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பாது​காப்பு பணி​யில் 50 கம்பெனி துணை ராணுவப் படைகள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளன என தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். மேலும், மனு​தாக்​கலுக்​கான அவகாசத்​தில் 3 நாட்​கள் விடு​முறை என்​ப​தால் 5 நாட்​கள் மட்​டுமே வேட்​புமனு தாக்​கல் செய்ய முடி​யும். பிரச்​சா​ரத்​துக்​கான அனு​ம​தி, முதலில் வரு​வோருக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் அளிக்​கப்​படும் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் 15-ம் தேதி வெளியிட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்​னேற்​பாடு​கள் தொடர்​பாக சென்னைதலைமைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஏப்​.23-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இந்த தேர்​தலில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள், 7,656 திருநங்​கைகள் என மொத்​தம் 5.69 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர்.

இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட பின்​னர் 3.14 லட்​சம் வாக்​காளர்கள் சேர்க்​கப்​பட்​டுள்ளனர். பொதுமக்​கள், வாக்​காளர் அட்டை வைத்திருந்தா​லும், தங்​கள் பெயர், வாக்​காளர் பட்​டியலில் உள்​ளதா என உறுதி செய்​து​ கொள்ள வேண்​டும். வாக்காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க மார்ச்​26-ம் தேதி வரை விண்​ணப்​பித்​தால், தேர்​தலுக்கு முன்பு, பெயர்​கள் வாக்காளர் பட்​டியலில் இடம்​பெறும்.

வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30-ம் தேதி தொடங்​கு​கிறது. வேட்​புமனு தாக்​கல் செய்ய கடைசி நாள் ஏப்.6 ஆகும். இதற்​கிடையே, மார்ச் 31 (மா​காவீர் ஜெயந்​தி), ஏப்​ரல் 3 (புனித வெள்​ளி), ஏப்​ரல் 5 (ஞா​யிற்​றுக்​கிழமை) ஆகிய நாட்​கள் அரசு விடு​முறை நாட்​கள் என்​ப​தால் அந்த 3 நாட்​களில் வேட்பு மனு தாக்​கல் செய்ய முடி​யாது. இதர 5 நாட்​கள் மட்​டுமே வேட்​புமனு தாக்​கல் செய்ய முடி​யும்.

வேட்​புமனுக்​களை காலை 11 முதல் மாலை 3 மணி வரை வழங்​கலாம். வேட்​புமனுக்​கள் பரிசீலனை ஏப்​.7-ம் தேதி நடை​பெறுகிறது. வேட்​புமனுக்​களை திரும்​பப் ​பெற ஏப்​.9-ம் தேதி கடைசி நாளாகும்.

50 கம்பெனி துணை ராணுவம்: தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்​துள்​ளன. அதைத் தொடர்ந்து 2,106 பறக்​கும் படை, கண்​காணிப்​பு குழுக்​கள் சோதனையை தொடங்​கி​யுள்ளன. தமிழகத்துக்கு தேர்​தல் பணிக்​காக 50 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் வந்​துள்​ளனர்.

வணி​கர்​கள் கொண்டு செல்​லும் பணத்​துக்கு உரிய ஆவணங்​கள் இருந்​தால், எவ்வளவு தொகை வேண்​டு​மா​னாலும் கொண்டு செல்​லலாம். சோதனை என்ற பெயரில் பொது​மக்​களுக்கு எந்த இடையூறும் செய்​யக்​கூ​டாது என்று அனைத்து மாவட்ட தேர்​தல் அதி​காரி​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை​கள் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது. ‘கூகுள் பே’ போன்ற யுபிஐ (UPI) மூலம் அதிக எண்​ணிக்​கை​யில் பணப் பரிவர்த்தனை நடந்​தால் அவை கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​படும். தேர்தல் தொடர்​பாக, சமூக வலைதளங்​களில் ஏஐ தொழில்​நுட்பம் மூலம்வெளி​யிடப்​படும் வீடியோக்களை கண்​காணித்து வரு​கிறோம்.

ரூ.1.26 கோடி பறிமுதல்: மார்ச் 16-ம் தேதி (நேற்று) காலை வரை தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி மதிப்​பிலான பணம், பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. பிரச்​சா​ரத்​துக்​கான அனு​ம​தி, முதலில் வரு​வோருக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் அளிக்​கப்​படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளலாம். பிரச்​சார அனு​மதி பெற இணை​யதளம் மூலம் விண்​ணப்​பிக்கலாம்.

பிரச்​சா​ரத்​தின்போது, 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கூடி​னால் தண்​ணீர் உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் ஏற்​படுத்த அறி​வுறுத்​தப்​படும்.இவ்​வாறு அவர் கூறி​னார். கூடு​தல் தலைமைத் தேர்​தல் அதி​காரி​கள் ஏ.சிவ​ஞானம், ஸ்ரீதர்​, இணை தலை​மை தேர்​தல்​ அதி​காரி மேனுவல்​ ராஜ் ஆகியோர்​ உடன்​ இருந்​தனர்​.

4 மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்: தமிழகத்தில் கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் ஆகிய 4 மாவட்ட எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவலர் நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையராக இருந்த டி.என்.ஹரிகிரண் பிரசாத், கரூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. கிரண் ஸ்ருதி, ஈரோடு எஸ்.பி.யாகவும், சென்னை மேற்குபோக்குவரத்து காவல் துணை ஆணையர் சுஜித் குமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் ஸ்ரீநாதா, விருதுநகர் எஸ்.பி.யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மேற்கண்ட 4 மாவட்டங்களில் எஸ்.பி.க்களாக இருந்த ஜோஸ் தங்கையா (கரூர்), சுஜாதா (ஈரோடு), பாலகிருஷ்ணன் (நாகப்பட்டினம்), கண்ணன் (விருதுநகர்) ஆகியோருக்கு விரைவில் வேறு பணியிடம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

<div class="paragraphs"><p>தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். படம்: ம.பிரபு</p></div>
தவெகவில் ‘உள்ளடி’ அரசியல் தீவிரம்: வேட்பாளர்களை கண்டறிய விஜய் திணறல்?!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in