இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: இலங்​கை​யில் தமிழ்த் ​தேசத்தை அங்​கீகரிக்​கும் கூட்​டாட்சி அரசி​யல் முறைமை உரு​வாக வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஈழத்​தமிழ் மக்​களை பிர​தி​நி​தித்​து​வம் செய்​யும் நாடாளு​மன்ற உறுப்​பினர் கஜேந்​திரகு​மார் பொன்னம்​பலம் தலை​மை​யில் ஐங்​கரநேசன், கஜேந்​திரன், சுரேஸ், காண்​டீபன், சு​காஸ் ஆகிய தமிழ்த் தேசி​யப் பேர​வை​யின் முக்​கிய பிர​முகர்​கள் கடந்த 20-ம் தேதி எனது இல்​லத்​தில் என்னை சந்​தித்​தனர்.

இலங்​கை​யில் தமிழர் தேசத்​தில் அந்நாட்டு அரசால் மேற்​கொள்​ளப்​படும் கட்​டமைப்​பு​கள் இன அழிப்பை தொடர்ந்து செய்து வரு​வதை தெளிவுபடுத்​தி​னர். தமிழர்​களின் இந்​நிலையை‌ போக்க தற்​போது இலங்​கை​யில் அரசி​யல் கட்​டமைப்பை மாற்ற வேண்​டும்.

தமிழ்த்​தேசத்​தின் தனித்து​வ​மான இறைமையின் அடிப்படை​யில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்​கக்​கூடிய கூட்​டாட்சி முறைமை உரு​வாக்​க வேண்டும்.

இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
மதிமுக உயர்நிலைக் குழு டிச.28-ல் கூடுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in