மதிமுக உயர்நிலைக் குழு டிச.28-ல் கூடுகிறது

மதிமுக உயர்நிலைக் குழு டிச.28-ல் கூடுகிறது
Updated on
1 min read

சென்னை: ம​தி​முக உயர்​நிலைக்​குழு கூட்​டம் டிச.28-ம் தேதி நடை​பெறுகிறது.

திமுக கூட்​ட​ணி​யில் உள்ள மதி​முக தேர்​தல் அறி​வித்த பின் தொகு​திப்​பங்​கீடு பேச்​சுவார்த்தை தொடங்​கப்​படும் என தெரி​வித்​துள்​ளது. இந்​நிலை​யில், தேர்​தல் பணி​கள் குறித்து ஆலோ​சனை மேற்​கொள்ள மதி​முக உயர்​நிலைக் குழுக் கூட்​டம் டிச.28-ம் தேதி நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மதி​முக வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘மதி​முக வழக்​கறிஞர் அணி நிர்​வாகி​கள் கூட்​டம், வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தாயகத்​தில் நடை​பெறுகிறது.பொதுச்​செய​லா​ளர் வைகோ கலந்து கொண்டு சிறப்​புரை ஆற்​றுகிறார்.

மதி​முக​வின் உயர்​நிலைக் குழுக் கூட்​டம், 28-ம் தேதி காலை 10 மணிக்​கு, கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜூன்​ராஜ் தலை​மை​யில் நடை​பெறுகிறது என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இ​தில் எஸ்​ஐஆர் பணி, வைகோ​ நடைபயணம் குறித்​து ஆலோ​சிக்​கப்​படவுள்ளது.

மதிமுக உயர்நிலைக் குழு டிச.28-ல் கூடுகிறது
தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in