நெல் கொள்முதல் நிலைய குறைபாடுகளுக்கு புகார் அளிக்கலாம்: விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை தகவல்

நெல் கொள்முதல் நிலைய குறைபாடுகளுக்கு புகார் அளிக்கலாம்: விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை தகவல்
Updated on
1 min read

சென்னை: நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் குறை​பாடு​கள் இருப்​பின் வாட்​ஸ்​அப் எண் மூலம் புகார் அளிக்​கலாம் என்று கூட்​டுறவுத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து கூட்​டுறவுத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக விவ​சா​யிகளின் நலன் கருதி நெல்​லுக்​கான ஊக்​கத்​தொகை​யாக சன்​னரக நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.156-ல் இருந்து ரூ.289 ஆகவும், பொதுரக நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.131-ல் இருந்து ரூ.159 ஆகவும் உயர்த்தி வழங்​கப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​வித்​தார். அதன்​படி நடப்பு கொள்​முதல் பரு​வத்​தில் செப்​டம்​பர் 3-ம் தேதி முதல் விவ​சா​யிகளிடம் இருந்து நெல் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது.

விவ​சா​யிகளின் நலன் கருதி நெல் கொள்​முதல் திட்​டத்தை வெளிப்​படைத்​தன்​மை​யுட​னும் பொறுப்​புணர்​வுட​னும் செயல்​படுத்த நிலை​யான வழி​காட்​டு​தல் செப்​.15-ல் தமிழக அரசால் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. நடப்பு பரு​வத்​தில் சன்​னரகம் நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.2,750-க்​கும், பொதுரகம் நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.2,600-க்​கும் இது​வரை 20,196 விவ​சா​யிகளிடம் இருந்து 1.17 லட்​சம் மெட்​ரிக் டன் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

விவ​சா​யிகள் தங்​களது நெல்லை விற்​பனை செய்​யும்​போது கொள்​முதல் நிலை​யங்​களில் உள்ள குறை​பாடு​கள் பற்​றியோ அல்​லது பணம் வசூலிப்​ப​தைப் பற்​றியோ புகார் தெரிவிக்க தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் உதவி மையத்தின் 9500801465 என்ற வாட்​ஸ்​அப் எண்​ணில் புகார் அளிக்​கலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

நெல் கொள்முதல் நிலைய குறைபாடுகளுக்கு புகார் அளிக்கலாம்: விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை தகவல்
‘முதல்வர் விஜய் ஒப்புதலின்றி பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்துக்கு உத்தரவா?’ - கனிமொழி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in