மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுக்க கோரி விவசாயிகள் பிரச்சார பயணம் பூம்புகாரில் தொடக்கம்

செப்.24-ல் திருவாரூரில் நிறைவு
கர்நாடகாவின் மேகேதாட்டு பகுதி

கர்நாடகாவின் மேகேதாட்டு பகுதி

Updated on
1 min read

மயிலாடுதுறை: மேகே​தாட்​டு​வில் கர்​நாடகா அரசு அணை கட்​டு​வதை தடுக்க வேண்​டும் ராசிமணலில் அணை கட்​டும் திட்​டத்தை தமிழகம் தொடங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழக காவிரி விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் பிரச்​சா​ரப் பயணம் மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் நேற்று தொடங்​கியது.

சங்​கத்​தின் பொதுச் செய​லா​ளர் பி.ஆர்​.​பாண்​டியன் தலைமை வகித்​தார். தேசிய- தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர் அய்​யாக்​கண்​ணு, தமிழ்​நாடு வணி​கர் சங்க பேரமைப்​பின் மாவட்​டத் தலை​வர் தமிழ்ச்​செல்​வன் உள்​ளிட்​டோர் பேசினர். பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​. விக்​கிரம​ராஜா கொடியசைத்து பிரச்​சா​ரப் பயணத்தை தொடங்​கி​வைத்​தார்.

காரைக்​காலில் செய்​தி​யாளர்​களிடம் பி.ஆர்​.​பாண்​டியன் கூறியதாவது: காவிரி உபரிநீரை தமிழகம் கடலில் கலக்க செய்​கிறது என கர்​நாடகா முதல்​வர் டி.கே.சிவகு​மார் தவறான பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​கிறார். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதற்​கும், அதை நியாயப்​படுத்​து​வதற்​கும் சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் தீவிரம் காட்​டு​கிறார்.

தமிழகம், புதுச்​சேரி மாநில விவ​சா​யிகளை​யும், அரசி​யல் கட்​சிகளை​யும் ஒருங்​கிணைக்​கும் வகை​யிலும், கர்​நாட​கா, தமிழக விவ​சா​யிகளின் நலனுக்​காக ராசிமணலில் தமிழகம் சார்பில் அணை கட்​டிக் கொள்ள ஒரு​மித்​த கருத்தை ஏற்​படுத்​தும் வகை​யிலும் இந்​தப்பிரச்​சார பயணம் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

மேகே​தாட்டு அணைக்கு எதி​ராக தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்ள புதுச்​சேரி முதல்​வருக்கு நன்​றி. மேகேதாட்டு அணைக்கு எதி​ராக புதுச்​சேரி அரசும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுக்க வேண்​டும். ராசிமணலில் அணை கட்ட வலி​யுறுத்தி தமிழக அரசு தீர்​மானத்தை நிறைவேற்ற வலி​யுறுத்​து​வோம். இவ்​வாறு தெரி​வித்​தார்.

இந்​தப் பயணம் காரைக்​கால், நாகை, திருத்​துறைப்​பூண்டி வழி​யாக மன்​னார்​குடியைச் சென்​றடைந்​தது. தொடர்ந்​து, செப்​.23-ம் தேதி சென்னை எழும்​பூரில் பிரச்​சாரக் கூட்​டம், 24-ம் தேதி திரு​வாரூரில் பிரச்​சா​ரப் பயண நிறைவு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கர்நாடகாவின் மேகேதாட்டு பகுதி</p></div>
‘மலிவான அரசியல்’ - காங். மேடையில் பிரதமர் மோடி குறித்த கிண்டலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in