வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம்: நெல் விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு

வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம்: நெல் விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
Updated on
1 min read

சென்னை: வரு​வாய்த் துறை ஊழியர்​களின் வேலைநிறுத்​தம் காரண​மாக, விவ​சா​யிகள் விளை​வித்த நெல்லை விற்​பனை செய்ய முடி​யாமல் தவித்து வரு​வ​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: விவ​சா​யிகள் தாங்​கள் விளை​வித்த நெல் மூட்​டைகளை அரசின் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விற்​பனை செய்​வதற்​கு, அந்​தந்த கிராம நிர்​வாக அலு​வலர்​கள் வழங்​கும் அடை​யாள சான்று கட்​டாய​மாகும்.

இந்​தச் சான்று இருந்​தால் மட்​டுமே கொள்​முதல் நிலை​யங்​களில் நெல்லை பதிவேற்​றம் செய்ய முடி​யும். இந்​நிலை​யில், வரு​வாய்த்​துறை ஊழியர் சங்​கங்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கடந்த 4 நாட்​களாக வேலைநிறுத்த போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளன.

இப்​போ​ராட்​டத்​தில் கிராம நிர்​வாக அலு​வலர்​களும் பங்​கேற்​றுள்​ள​தால், விவ​சா​யிகளுக்கு தேவை​யான சான்​றுகளை பெறு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால், பல மாவட்​டங்​களில் நெல்லை விற்க முடி​யாமல் விவ​சா​யிகள் தவித்து வரு​கின்​றனர்.

ஏற்​கெ​னவே அறு​வடை செய்த நெல் மூட்​டைகளை விற்​பனை செய்ய முடி​யாமல் கொள்​முதல் நிலை​யங்​களில் அடுக்கி வைத்​துள்​ள​தால், அவற்​றைப் பாது​காக்​கும் கூடு​தல் செலவை விவ​சா​யிகள் ஏற்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

அதிகாரிகள் மெத்தனம்

அறு​வடை செய்​யும் நிலை​யில் பயிர்​கள் இருந்​தா​லும், மேற்​கொண்டு அறு​வடை செய்த நெல் மூட்​டைகளை பாது​காக்க வேண்​டுமே என்​கிற அச்​சத்​தில் அறு​வடை​யும் தேக்​கம் அடைந்​துள்​ளது.

இத்​தகைய சூழலை கணித்து தகுந்த முன்​னேற்​பாடு​களை செய்​திருக்க வேண்​டிய அதி​காரி​களின் மெத்​தனப் போக்​கால் விவ​சா​யிகள் அவதி​யடைந்து வரு​கின்​றனர்.

இவ்​விவ​காரத்​தில் முதல்​வர் தலை​யிட்​டு, சான்​றிதழ் சிக்​கலின்றி நெல் கொள்​முதலை தடை​யின்றி மேற்​கொள்ள உரிய மாற்று ஏற்​பாடு​களை செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம்: நெல் விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு
அரசு பல் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு: நோயாளிகள் அவதியடைவதாக குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in