திருவையாறு எம்எல்ஏ-வின் கார் மோதி விவசாயி உயிரிழப்பு

வலது: விவசாயி கோவிந்தராஜ்

வலது: விவசாயி கோவிந்தராஜ்

Updated on
1 min read

தஞ்சாவூர்: திருவையாறு திமுக எம்எல்ஏ கார் மோதியதில் விவசாயி ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கோவிந்தராஜ் தனது சொந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மதியம் விவசாய வேலைக்கு வயலுக்கு செல்ல, தனது இருசக்கர வாகனத்தில் கோவிந்தராஜ் சென்றார். அப்போது ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த, திமுக தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரின் கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஒரத்தநாடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், எம்எல்ஏ துரை.சந்திரசேகரனின் கார் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரத்தநாடு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

<div class="paragraphs"><p>வலது: விவசாயி கோவிந்தராஜ்</p></div>
ஆஸி.யில் துப்பாக்கிச் சூடு நடத்திய சஜித் அக்ரம் ஓர் இந்தியர்? - அதிகாரிகள் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in