மதுரை காவல்நிலையத்தில் மர்ம சாவு: லாரி டிரைவர் உடலை 5 நாளுக்கு பின் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர்

ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதபடி வரும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள். படம்: நா.தங்கரத்தினம்

ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதபடி வரும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள். படம்: நா.தங்கரத்தினம்

Updated on: 
1 min read

மதுரை: மதுரை செக்​கானூரணி காவல் நிலை​யத்​தில் உயி​ரிழந்த லாரி ஓட்​டுநர் பால​கிருஷ்​ணன் உடலை 5 நாட்​கள் போராட்டத்​துக்கு பின்​னர், அவரது குடும்​பத்​தினர் பெற்​றுக் கொண்​டனர்.

ஏலக்​காய் ஏற்​றிவந்த கண்​டெய்​னர் லாரி தீப்பிடித்து எரிந்த வழக்​கில், மதுரை செக்​கானூரணி காவல் நிலை​யத்​தில் விசா​ரணைக்​காக அழைக்​கப்​பட்ட அந்த வாக​னத்​தின் ஓட்​டுநரான தேனி மாவட்​டம் டி.அழகர் நாயக்​கன்​பட்டி பகுதி​யைச் சேர்ந்த பால​கிருஷ்​ணன் (42) காவல் நிலை​யத்​தில் கடந்த 14-ம் தேதி அதி​காலை​யில் மர்​மமான முறை​யில் உயி​ரிழந்​தார்.

இவர், கழிவறை​யில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​ட​தாக போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இது தொடர்​பாக செக்​கானூரணி காவல் நிலை​யத்​தில் விசா​ரணை அதி​காரியாக இருந்த ஆய்​வாளர் முத்து, காவலர்​கள் பழனிவேல் ராஜன், கலைச்​செல்வி ஆகிய 3 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்பட்​டனர். மேலும், இந்த வழக்கு சிபி​சிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்டு விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இதைத் தொடர்ந்து, பால​கிருஷ்ணனின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்​துவ மனை​யில் அன்​றைய தினம் இரவு பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டது. பிரேதப் பரிசோதனை அறிக்​கை​யில் அவரின் உடலில் 5 இடங்​களில் காயங்​கள் இருப்​ப​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இந்நிலை​யில், இந்த வழக்கை கொலை வழக்​காகப் பதிவு செய்ய வேண்​டும் எனக் கோரி உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, குழந்​தைகள் மற்​றும் உறவினர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தொடர் போராட் டத்​தில் ஈடு​பட்டு வந்த அவரது உறவினர்​கள், 5-வது நாளான நேற்று, அவரின் உடலை வாங்க சம்​மதம் தெரி​வித்​தனர்.

இதைத் தொடர்ந்து பால​கிருஷ்ணனின் உடல், அவரது குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது, அவரின் உடலைப் பார்த்து கதறி அழுத அவரது மனைவி சுதா, நான் எனது கணவரோடு காவல் நிலை​யத்​துக்​குச் சென்​றிருந்​தால், இப்​படி நடந்திருக்​காதே, எனவும் எனது கணவருக்கு நிகழ்ந்த மரணம் போல, இனி யாருக்​கும் நடக்​கக் கூடாது.

‘ஐயா முதல்​வரே..! எல்​லாருக்​கும் நல்​லது பண்​றீங்​கன்னு சொல்​றீங்​களே; தந்​தையை இழந்து தனியா தவித்து நிற்​கும் எனது மகளின் தவிப்பை கேட்க மாட்​டீர்​களா’ எனக் கதறி அழுதது அனைவரை​யும் கலங்க வைத்​தது. இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை பிணவறை பகுதி​யில் ஏராளமான போலீ​ஸார் குவிக்​கப் பட்​டிருந்​தனர்.

<div class="paragraphs"><p>ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதபடி வரும் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள். படம்: நா.தங்கரத்தினம்</p></div>
அன்பில் மகேஸின் நீதிமன்ற காவலை டிச.2 வரை நீட்டித்து உத்தரவு

X