பாஜக தலைவர்கள் பதவி விலகுவதாக வலைதளங்களில் போலி அறிக்கை: போலீஸில் புகார்

கமலாலயம் | கோப்புப் படம்

கமலாலயம் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாஜக, ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகுவதாக குறிப்பிடப்பட்ட அறிக்கை ஒன்று பாஜகவின் அதிகாரப்பூர்வ கடித தலைப்பில் வெளியானது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக பாஜக விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், லெட்டர் பேடை போலியாக தயாரித்து தவறான செய்தியை சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

போலி அறிக்கையை தயாரித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, தமிழக பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் குமரகுரு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

<div class="paragraphs"><p>கமலாலயம் | கோப்புப் படம்</p></div>
முதல்வராக விஜய் இன்று பதவியேற்கிறார்: 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in