இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் வரை முன்பதிவு பயணிகள் ரயில் ஏறும் இடத்தை மாற்றும் முறை அமல்

இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் வரை முன்பதிவு பயணிகள் ரயில் ஏறும் இடத்தை மாற்றும் முறை அமல்
Updated on
1 min read

சென்னை: ரயில்​வே​யில் நிர்​வாக ரீதி​யாக​வும், பயணி​களின் வசதிக்​காக​வும் பல்​வேறு புதிய மாற்​றங்​கள் அமல்​படுத்​தப்​படு​கின்​றன. ரயில் டிக்​கெட் அட்​ட​வணை 4 மணி நேரத்​துக்கு முன்பே தயாரிக்​கப்​படும்​போது, பயணி​களுக்கு இருக்​கைகள் உறுதி செய்​யப்​ப​டாத பட்​சத்​தில், கடைசி நேரத்​தில் பயணத் திட்​டங்​களை ரத்து செய்​வ​திலோ மாற்று ஏற்​பாடு​களைச் செய்​வ​திலோ, அவர்​கள் சிரமங்​களை எதிர்​கொண்​டனர்.

புதிய விதி​முறை​களின்​படி, முதல் டிக்​கெட் அட்​ட​வணை 9 நேரத்​துக்கு முன்பே தயாரிக்​கப்​படு​வ​தால் பயணி​கள் தாங்​கள் செல்ல வேண்​டிய இடத்தை அடைய மாற்று ஏற்​பாடு​களைச் செய்​து​கொள்ள முடி​யும்.

இந்​நிலை​யில், ரயில் புறப்​படு​வதற்கு 30 நிமிடங்​களுக்கு முன், இரண்​டாவது பட்​டியல் தயாரிக்​கும் வரை​யில், ரயில் ஏறும் இடத்தை மாற்​றிக்​கொள்​ளும் வசதியை தெற்கு ரயில்வே அமல்​படுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: புதிய விதி​முறைப்​படி, ரயில் புறப்​படு​வதற்கு 30 நிமிடங்​களுக்கு முன்பு வரை ஏறும் இடத்தை மாற்​றிக்​கொள்ள முடி​யும். இரண்​டாவது முன்​ப​திவுப் பட்​டியலில் இடம் பெறும். காத்​திருப்​போர் பட்​டியலில் இருப்​போருக்​கு, இந்த வசதி கிடை​யாது. இந்த வசதியை ஒரு​முறை மட்​டுமே பயன்​படுத்த முடி​யும் என்றனர்.

இரண்டாவது பட்டியல் தயாரிக்கும் வரை முன்பதிவு பயணிகள் ரயில் ஏறும் இடத்தை மாற்றும் முறை அமல்
தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க சாய்வுதள வசதிகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in