தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
1 min read

போடி : தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில், முக்கிய வழித் தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் பயணிகளின் தேவை அதிகரிப்பின் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு வரவேற்பை பொருத்து நீட்டிக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் - போடிநாயக்கனூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயிலின் (06059) சேவை, ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, இந்த சிறப்பு ரயிலின் (06060) சேவை ஜூலை 5-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் ஒரு முதல் வகுப்பு ஏசியுடன் இரண்டடுக்கு பெட்டி, 3 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள், ஒரு மூன்றடுக்கு பெட்டி, 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப்பெட்டி இணைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
“மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும்” - இலங்கை அமைச்சர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in