பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி: 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிப்பு

பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி: 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: கைத்​திற தொழில்​கள் வளர்ச்சி கழகம் சார்​பில் சென்​னை​யில் நவராத்திரி கொலு பொம்​மை​கள் கண்​காட்சி தொடங்​கப்​பட்​டுள்​ளது. கொலு பொம்​மை​கள் வாங்​கும் வாடிக்​கை​யாளர்​களுக்கு 10 சதவீதம் சிறப்​புத் தள்​ளு​படி​யும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு கைத்​திறத் தொழில்​கள் வளர்ச்​சிக் கழகம் சார்​பில், நவராத்​திரி பண்​டிகையை முன்​னிட்டு ஆண்​டு​தோறும் சிறப்பு கொலு பொம்​மை​கள் கண்​காட்சி மற்​றும் விற்​பனை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள பூம்​பு​கார் விற்​பனை நிலை​யத்​தில் சிறப்பு கொலு பொம்​மை​கள் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. கண்​காட்​சியை கைத்​தறி, கைத்​திறன், துணிநூல் மற்​றும் கதர்த் துறை அரசு செய​லா​ளர் லில்லி குத்​து​விளக்​கேற்றி தொடங்கி வைத்​தார்.

பாரம்​பரிய கைவினைஞர்​களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்​படுத்​தும் நோக்​கில் நடத்​தப்​படும் இக்​கண்​காட்​சி​யில், தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​கள் மட்​டுமன்றி ஆந்​தி​ரா, கர்​நாட​கா, கொல்​கத்​தா, ராஜஸ்​தான் மற்​றும் புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களில் இருந்​தும் பிரத்​யேக​மாக தயாரிக்​கப்​பட்ட கொலு பொம்​மை​கள் விற்​பனைக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன.

குறிப்​பாக, அஷ்டலட்​சுமி செட், தசாவ​தா​ரம் செட், அறு​படைவீடு செட், வைகுண்​டம் செட், மீனாட்சி கல்​யாணம் செட், திரு​வண்​ணா​மலை கிரிவலம் செட், மற்​றும்  காஞ்சி பெரிய​வர் போன்ற பல்​வேறு சமூக, ஆன்​மீக கருத்​துகளைக் கொண்ட சிறப்​பான கொலு பொம்​மை​கள் முக்​கிய அங்​கம் வகிக்​கிறது.

இக்​கண்​காட்​சி​யில் குறைந்​த​பட்​சம் ரூ.50 முதல் அதி​கபட்​சம் ரூ.1.25 லட்​சம் வரையி​லான பொம்​மை​கள் இடம் பெற்​றுள்​ளன. அனைத்து கொலு பொம்​மை​களுக்​கும் 10 சதவீத சிறப்​புத் தள்​ளு​படி வழங்​கப்​படு​கிறது.

இக்​கண்​காட்சி அக்​டோபர் 31-ம் தேதி வரை (ஞா​யிறுக்​கிழமை உட்​பட) அனைத்து நாட்​களி​லும் தினசரி காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி: 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிப்பு
சென்னை: தம்பி வாங்கிய கடனுக்காக அண்ணனை தாக்கிய செல்போன் வியாபாரி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in