சென்னை: தம்பி வாங்கிய கடனுக்காக அண்ணனை தாக்கிய செல்போன் வியாபாரி கைது

சென்னை: தம்பி வாங்கிய கடனுக்காக அண்ணனை தாக்கிய செல்போன் வியாபாரி கைது
Updated on: 
1 min read

சென்னை: ராஜஸ்​தான் மாநிலத்​தைச் சேர்ந்​தவர் அசோக் (27). சென்னை சிந்​தா​திரிப்​பேட்டை அத்​திப்​பட்​டான் தெரு​வில் உள்ள கடை​யின் 3-வது மாடி​யில் தனது தம்​பி​யுடன் இணைந்து செல்​போன் கடை நடத்தி வரு​கிறார்.

இந்​நிலை​யில் கடந்த 25-ம் தேதி இரவு, இளைஞர் ஒரு​வர் தனது நண்​பர்​களு​டன் கடைக்கு வந்து, அசோக்கிடம் செல்போன்கள் வாங்குவதாக கூறி ஏமாற்றி, காரில் அவரை வலுக்​கட்​டாய​மாக ஏற்றி கடத்​தினர்.

“உனது தம்பிக்கு கடனாக கொடுத்த ரூ.10 லட்​சம் பணத்​துக்கு நீதான் பொறுப்​பு. நீதான் அந்​தப் பணத்தை தர வேண்​டும்” எனக்​கூறி அசோக்கை தாக்​கினர்.

இந்​நிலை​யில் அண்​ணாநகர் வி.ஆர். ஷாப்​பிங் மால் அருகே கார் சென்​ற​ போது, அசோக், காரில் இருந்​தவர்​களை தள்​ளி​விட்டு தப்​பி​னார். பின்​னர் இதுகுறித்து சிந்​தா​திரிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், நண்​பர்​களு​டன் வந்து அசோக்கை கடத்​தி, தாக்​கியது சென்னை அமைந்​தகரை பூந்​தமல்லி நெடுஞ்​சாலை பகு​தி​யைச் சேர்ந்த சேது​ராமன் (24) என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, சேது​ராமன் கைது செய்​யப்​பட்​டார். தலைமறை​வாக உள்ள அவரது கூட்​டாளி​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். மேலும் கடத்​தலுக்கு பயன்​படுத்​தி​ய காரை போலீ​ஸார்​ பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை: தம்பி வாங்கிய கடனுக்காக அண்ணனை தாக்கிய செல்போன் வியாபாரி கைது
வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க முடிவு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in