வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ்: சுகாதாரத் துறை திட்டம்

வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ்: சுகாதாரத் துறை திட்டம்
Updated on
1 min read

சென்னை: வீடு​களில் உயி​ரிழப்பு நிகழ்ந்​தா​லும், இறப்​புக்​கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்​றிதழ் வழங்​கு​வதை செயல்​படுத்த தமிழக பொது சுகா​தா​ரத் துறை முடிவு செய்​துள்​ளது.

தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 6.96 லட்​சம் உயி​ரிழப்​பு​கள் நிகழ்​கின்​றன. அதில், 23 சதவீதம் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சை​யில் இருக்​கும் போதும், 73 சதவீதம் வீடு​களிளும் நடக்​கிறது. 4 சதவீதம் எதிர்​பா​ராத விபத்​துகள் காரண​மாக உள்​ளது.

இந்​நிலை​யில், இறப்​புக்​கான முழு​மை​யான காரணங்​களை கண்​டறிந்​து, அப்​பகு​தி​யில் முன்​னெச்​சரிக்கை தடுப்பு பணி​கள் செய்​யும் ஆய்வை தமிழக பொது சுகா​தா​ரத்​துறை மேற்​கொண்டு வரு​கிறது.

இறப்புக்கான காரணங்கள் பதிவு

முதல்​கட்​ட​மாக, கரூர், கிருஷ்ணகிரி மாவட்​டங்​களில் 2023-ம் ஆண்​டு​களில் இறந்​தவர்​களின் விபரங்​கள் சேகரிக்​கப்​பட்​டன. அதில், எவ்​வித காரண​மும் இன்​றி, வயது மூப்பு காரண​மாக இறந்​தனர் என குறிப்​பிடப்​பட்​டுள்ள தகவல்​களின்​படி, இறந்​தவர்​களின் வீடு​களுக்கு சென்​று, இறப்​புக்​கான நோய் உள்​ளிட்ட காரணங்​கள் பதிவு செய்​யப்​படு​கிறது.

இதுதொடர்​பாக, பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​களிடம் கேட்ட போது, “உலக சுகா​தார நிறு​வனம், இந்​திய மருத்​துவ ஆராய்ச்சி கவுன்​சிலுடன் இணைந்​து, கரூர், கிருஷ்ணகிரி மாவட்​டங்​களில், வீடு​களில் இறந்​தவர்​களின் விபரங்​கள் அடிப்​படை​யில், அவர்​களின் இறப்​புக்​கான காரணம் பதிவு செய்​யப்​பட்​டது.

அதில், 98 சதவீதம் இறப்​புக்​கான காரணம் கண்​டறிந்​த​தில், 20 சதவீதம் வரை இதய நோ​யாலும், 7 சதவீதம் நீரிழிவு நோய் போன்​றவற்​றாலும் இறப்​பு​கள் நிகழ்ந்​திருப்​பது தெரிய வந்​துள்​ளது.

தொடர்ந்​து, பெரம்​பலுார், திருநெல்​வேலி உட்பட 10 மாவட்​டங்​களி​லும் ஆய்வு மேற்​கொள்​ளப்​படும். பின்​னர், மாநிலம் முழுவதும் விரிவுப்​படுத்​தப்​பட​வுள்​ளது.

விழிப்​புணர்​வு நடவடிக்​கை

வரும் காலங்​களில் வீடு​களில் இறந்​தா​லும், இறப்​புக்​கான காரணத்தை மருத்துவர் மூல​மாக உறுதி செய்து சான்​றிதழ் வழங்​கு​வது கட்​டாய​மாக்​கப்​படும். இறந்​தவர்​களின் இறப்​பு​களை முறை​யாக பதிவு செய்​யு​மாறு அனைத்து சுகா​தார அதி​காரி​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த புள்ளி விபரங்​கள் மூலம் ஒரு பகு​தி​யில் அதி​கப்​படி​யாக இறப்​புக்​கான காரணத்தை கண்​டறிந்​து, அங்கு விழிப்​புணர்​வு தடுப்​பு நடவடிக்​கை மேற்​கொள்​ளப்​படும்​” என்​றனர்​.

வீடுகளில் உயிரிழப்பு நிகழ்ந்தாலும் இறப்புக்கான காரணத்தை மருத்துவர் மூலம் உறுதி செய்து சான்றிதழ்: சுகாதாரத் துறை திட்டம்
திமுக தொழிற்சங்க ஓட்டுநர்களை வழக்கமான பணிக்கு மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in