அதிமுக, திமுக சேர்ந்து வந்தாலும் ஆட்சி அமைக்கலாம்: தமிழக ஆளுநர் அர்லேகர் கருத்து

ஆளுநர் அர்லேகர்

ஆளுநர் அர்லேகர்

Updated on
1 min read

சென்னை: விஜய் முதல்​வர் ஆவதை தடுக்​க​வில்​லை. அதி​முக, திமுக தங்​களுக்​குள் இணைந்து பெரும்​பான்​மையை நிரூபித்​தால்​கூட, அவர்​களும் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தனி​யார் ஆங்​கிலத் தொலைக்​காட்​சிக்கு அவர் அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தவெக தலை​வர் விஜய் தனக்கு பெரும்​பான்மை இருப்​ப​தாக தெரி​வித்​தால் எந்தெந்த கட்​சிகளின் ஆதரவு தனக்கு இருக்​கிறது என்​பதை முன்கூட்​டியே நிரூபிக்க வேண்​டும். அப்​படி பெரும்​பான்​மையை நிரூபிக்க முடி​யாத கட்​சியை எப்​படி நான் ஆட்சி அமைக்க அழைக்க முடி​யும். விஜய் நாளைக்கே தனக்கு 118 உறுப்​பினர்​களின் ஆதரவு இருப்​ப​தாக நிரூபித்​தால் உடனே அவரை ஆட்சி அமைக்க அழைக்​கப் போகிறேன்.

இந்த சூழலில் விஜய்யை நான் தடுப்​ப​தாக எப்​படி கூற முடி​யும். விஜய் மட்​டுமல்ல, ஜனநாயக முறைப்​படி யாரை​யுமே என்​னால் தடுக்க முடி​யாது. அதி​முக, திமுக தங்​களுக்​குள் இணைந்து பெரும்​பான்​மையை நிரூபித்​தா​லும் அவர்​கள்​கூட ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.

என்​னைப் பொருத்​தவரை, 118 உறுப்​பினர்​களின் ஆதரவு இருப்பதை யார் நிரூபிக்​கிறார்​களோ அவர்​களைத்​தான் என்​னால் அழைக்க முடி​யும். அதற்​காக அனை​வரை​யும் ஆளுநர் மாளி​கைக்கு அழைத்து வர வேண்​டும் என்ற அர்த்​தமில்லை.

பொம்மை வழக்​கு பொருந்தாது: எஸ்​.ஆர்​.பொம்மை வழக்​கின் உச்ச நீதி​மன்ற தீர்ப்பு தற்​போதைய தமிழக அரசி​யல் சூழலுக்கு பொருந்​தாது. அந்த வழக்கு ஏற்​கெனவே உள்ள ஆட்​சிக்​குத்​தான் பொருந்​தும். புதிய ஆட்சி அமைவதற்கு அனு​மதி வழங்​கு​வதற்கு அந்த வழக்​கின் தீர்ப்பை அடிப்​படை​யாக கொள்ள முடி​யாது.

அடுத்த 2, 3 நாட்​களில் அடுத்த 2, 3 நாட்​களில் யாருமே ‘118’ என்ற இலக்கை அடைய முடி​யா​விட்​டால், எனக்கு முன்​பாக சட்டரீதியாக என்​னென்ன வழி​முறை​கள் இருக்​கிறதோ அதில் சிறப்​பான ஒன்றை கடைபிடிப்​பேன்.

எம்​எல்​ஏக்​களை நட்​சத்​திர விடு​தி​களில் அடைத்து வைத்து குதிரை பேரம் நடத்​து​வது நல்ல விஷ​யம் அல்ல. அதை தடுப்​ப​தற்​காகத்​தான் என்​னால் முடிந்த வரை இந்த விவ​காரத்தை விரை​வாக முடிவுக்கு கொண்​டு வர முயற்​சித்து வரு​கிறேன். அதற்​காக பெரும்​பான்மை இல்​லாத ஒரு கட்​சியை அழைத்து ஆட்சி அமைக்​கு​மாறு என்​னால் எப்​படி கூற முடி​யும்?

சட்​டப்​பேர​வை​யில் தங்​கள் பலத்தை நிரூபிக்க முடி​யா​விட்​டால் அது அந்த கட்​சி​யின் பிரச்​சினை மட்​டுமல்ல. ஒட்​டுமொத்த தமிழக மக்​களின் பிரச்​சினை​யும்​கூட. எதை​யும் ஆராய்ந்து பார்க்​காமல் ஒரு கட்​சியை அழைத்து எப்​படி பதவிப் பிர​மாணம் செய்து வைத்து ஆட்சி அமைக்​கு​மாறு கூற முடி​யும்?

118 உறுப்​பினர்​களின் ஆதரவு யாருக்கு இருக்​கிறது என்​பதை ஆராய்ந்​து, அதில் திருப்​தி​யடைந்​தால் மட்​டுமே என்​னால் அடுத்த கட்​டத்​துக்கு செல்ல முடி​யும். இந்த விவ​காரத்​தில் அதி​கப்​படி​யான அழுத்​தங்​கள் எனக்கு இருக்​கிறது. இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>ஆளுநர் அர்லேகர்</p></div>
தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in