கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் தர வேண்டும்: தமிழக அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் தர வேண்டும்: தமிழக அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: டெல்டா மற்​றும் தென்​மாவட்​டங்​களில் கனமழை​யால் பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடி​யாக வழங்க வேண்​டும் என்று அரசை எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அதி​முக பொதுச் செய​லா​ள​ரும், சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வருமான பழனி​சாமி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: கடந்த ஒரு​வார கால​மாக, டெல்டா மாவட்​டங்​களி​லும் திருநெல்​வேலி உள்​ளிட்ட தென்​மாவட்​டங்​களி​லும் பெய்த தொடர் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரு​மளவு மழைநீரில் மூழ்​கியுள்​ளன. மேலும் கரும்​பு, வாழை, வெற்​றிலை போன்ற இதர பயிர்​களும் மழைநீரில் மூழ்​கி​விட்​டன. கனமழை​யின் காரண​மாக அப்​பகு​தி​களில் ஓடும் ஆறுகள், வாய்க்​கால்​கள் மற்​றும் சிற்​றாறுகளில் தண்​ணீர் அதி​களவு சென்று கொண்​டிருக்​கிறது.

இதனால் ஒவ்​வொரு வயல்​வெளி​யும் ஏரி போல​வும், கடல் போல​வும் காட்​சி​யளிப்​பது வேதனைக்​குரிய​தாக உள்​ளது. பரு​வமழை தொடங்​கும் முன்பே வாய்க்​கால்​கள் மற்​றும் வரத்​துக் கால்​வாய்​களை தூர் வாராததே தற்​போதைய நிலைக்​குக் காரணம். பாடு​பட்டு விளை​வித்த நெற்​ப​யிர்​கள் வெள்​ளத்​தால் சேதமடைந்​ததைப் பார்த்து விவ​சா​யிகள் மிகுந்த மனவேதனை அடைந்​துள்​ளனர். இந்​திய வானிலை ஆராய்ச்சி மையம் முன்​கூட்​டியே வானிலை நில​வரம் மற்​றும் மழை பொழிவு குறித்து அறி​வித்த பின்​பும், வயல்​வெளி​களில் தேங்​கும் நீரை மடை மாற்றி வெளியே அனுப்ப எந்​த​வித முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை​யும் வேளாண்​மைத் துறை எடுக்​காதது கடும் கண்​டனத்​துக்​குரியது.

டெல்டா மாவட்​டங்​களில் மட்​டும் 3 லட்​சம் ஏக்​கருக்கு மேல் மழைநீர் சூழ்ந்து நெற்​ப​யிர்​கள் சேதமடைந்​துள்​ளன. இந்த நெற்​ப​யிர்​களுக்​கான காப்​பீடு முறை​யாக செய்​யப்​பட்​ட​தா, தூத்​துக்குடி மாவட்​டத்​தில் வெற்​றிலைக்கு காப்​பீடு செய்​யப்​பட்​டுள்​ளதா என்பது தெரிய​வில்லை. காப்​பீடு செய்​யப்​பட்​டிருந்​தால் விவ​சா​யிகளுக்​குரிய நஷ்ட ஈட்டை காப்பீட்டு நிறு​வனங்களிட​மிருந்து உடனடி​யாக பெற்​றுத் தர அரசை வலி​யுறுத்​துகிறேன்.

தமிழகத்​தில் பல மாவட்​டங்​களில் பயி​ரிடப்​பட்ட நெற்​ப​யிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்​படைந்​துள்​ளன. அரசு அதி​காரிகள் பாதிக்​கப்பட்ட பகு​தி​களுக்​குச்சென்று தண்ணீரில் மூழ்​கி​யுள்ள நெற்​ப​யிர்​களைக் கணக்​கெடுத்து, பாதிக்கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு ஏக்​கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண​மாக​வும் பாதிப்​படைந்​துள்ள இதர பயிர்​களுக்கு உரிய நிவாரண​மும் உடனடி​யாக வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லினை வலி​யுறுத்​துகிறேன்​. இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் தர வேண்டும்: தமிழக அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்
கூட்டாட்சியியலை நிலைநிறுத்தி மாநில உரிமைகளை காப்போம்: அரசியலமைப்பு சட்ட தினத்தில் முதல்வர் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in