சென்னையில் பிரதமரை சந்திக்கும் பழனிசாமி

சென்னையில் பிரதமரை சந்திக்கும் பழனிசாமி
Updated on: 
1 min read

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமான நிலையத்தில் சந்தித்து பேச உள்ளார்.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி நீடித்து வரும் நிலையில், கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் விமான நிலையம் சென்று பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க உள்ளார். பின்னர் விமான நிலையத்தில் தனியாக பிரதமரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த சந்திப்பில், தமிழக அரசியல் சூழல், நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள், தவெகவின் தொடர் வெற்றி, திமுக, அதிமுகவின் தொடர் தோல்விகள், அதிமுகவில் தனி அணியாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு செயல்பட்டு வருவதை முடிவுக்கு கொண்டுவருவது, இடைத்தேர்தலில் தவெகவுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து சி.வி.சண்முகம் தலைமையில் 21 எம்எல்ஏக்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிரதமரை சந்திக்கும் பழனிசாமி
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை: ரூ.13 ஆயிரம் கோடி வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in