“இடைக்கால பட்ஜெட்டில் உருப்படியாக எதுவும் இல்லை” - பழனிசாமி விமர்சனம்

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேட்டி அளித்தார்.படம்: ம.பிரபு

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேட்டி அளித்தார்.படம்: ம.பிரபு

Updated on
1 min read

‘தமிழக அரசு தாக்​கல் செய்த இடைக்​கால பட்​ஜெட்​டில் உருப்​படி​யாக எது​வும் இல்​லை. வார்த்தை ஜாலங்​களால் நிறைந்த உரை​யாக இருக்​கிறது’ என எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி விமர்​சித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக சட்​டப்​பேரவை வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: திமுக அரசு தாக்​கல் செய்த 2026-27-ம் ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட், கடந்த 5 ஆண்​டு​களைப்​போல வார்த்தை ஜாலங்​கள் நிறைந்த, மேனா மினுக்கி உரை​யாகத்​தான் இருக்​கிறது. கடந்த 2025-26 நிதி​யாண்டு வரு​வாய் வரவு​களில், மாநிலத்​தின் சொந்த வரு​வாய் ரூ.2.58 லட்​சம் கோடி என்று எதிர்​பார்த்த நிலை​யில், ரூ.2.32 லட்​சம் கோடி​யாகக் குறைந்​துள்​ளது. இதைப்பற்றி எந்த விளக்​க​மும் தெரிவிக்​கப்​பட​வில்​லை. அதே​போல் 2025-26-ம் ஆண்​டுக்கு ரூ.66,753 கோடி செல​விடப்​படும் என கணித்த நிலை​யில், ரூ.51,442 கோடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​கான காரணத்​தை​யும் நிதி​யமைச்​சர் விளக்​க​வில்​லை.

இவ்​வாறு நிதி பற்​றாக்​குறை அதி​கரித்​துக் கொண்டே சென்​றால், அதை ஈடு செய்ய மக்​கள் மீதான வரிச்​சுமை கூடும். திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன் ரகு​ராம் ராஜன் தலை​மை​யில் நிதி மேலாண்​மைக் குழு அமைத்து மாநில நிதி​நிலை சீர்​செய்​யப்​படும் என்​ற​னர். ஆனால், இந்த நிபுணர் குழு அமைத்த பிறகு​தான் அதிக கடனை தமி​ழ​கத்​தில் வாங்​கி​யுள்​ளனர். இன்​றைய மாநில பட்​ஜெட் மற்​றும் வேளாண் பட்​ஜெட்​களில் ஏறத்​தாழ 5 மணி நேரம் பேசிய 2 அமைச்​சர்​களின் உரை​யில், வரவு செலவு திட்​டம் பற்றி உருப்​படி​யாக எது​வும் இல்​லை.

‘அத்​திப்​பழம் வெளியே அழகாக இருக்​கும், புட்​டுப் பார்த்​தால் உள்ளே சொத்​தை​யாக இருக்​கும்” என்​ப​தைப்​போல் அமைந்​திருக்​கிறது திமுக​வின் பட்​ஜெட். அதே​போல் 2021 தேர்​தலில் திமுக வெளி​யிட்ட 525 அறி​விப்​பு​களில் நான்​கில் ஒரு பங்கை மட்​டுமே நிறை​வேற்​றி​யுள்ள நிலை​யில், அதில் 95 சதவீத அறி​விப்​பு​கள் நிறை​வேற்​றப்​பட்டு விட்​ட​தாக சொல்​வது முற்​றி​லும் பொய். இதற்​கெல்​லாம் விரை​வில் விடிவு​காலம் வரும். அந்த வகை​யில், சட்​டப்​பேரவை தேர்​தலில் அதிக இடங்​களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்​கும். இவ்​வாறு அவர் கூறினார்​.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேட்டி அளித்தார்.படம்: ம.பிரபு</p></div>
“பட்ஜெட் அல்ல... காது குத்து விழா” - அழைப்பிதழுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in