அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை இணைத்துக் கொண்ட விஜய்தான் களவாணி: பழனிசாமி கடும் விமர்சனம்

அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை இணைத்துக் கொண்ட விஜய்தான் களவாணி: பழனிசாமி கடும் விமர்சனம்
Updated on
1 min read

சேலம்: அ​தி​முக​வில் வெற்றி பெற்றவர்​களை ராஜி​னாமா செய்யவைத்து தவெக​வுடன் இணைத்த தவெக தலை​வர் தான் களவாணி என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யுள்​ளார்.

ஓமலூரில் செய்​தி​யாளர்களிடம் கூறியது: அதி​முகவை பொறுத்​தவரை ஆட்​சி​யில் இருந்​தா​லும், இல்​லா​விட்​டாலும் மக்​கள் பிரச்​சினையை அறிந்து தீர்த்து வரு​கிறோம். புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள தவெக அரசு, மேகே​தாட்டு அணை கட்​டு​வதற்கு தனி தீர்​மானம் கொண்டு வந்​தது. இதில் நடு​வர் மன்​றம் அமைக்​கப்​படும் என்​பது தேவையற்​றது.

அதி​முக-​வும் திமுக-​வும் கூட்டு களவாணி​கள் என்று விஜய் பேசி​யுள்​ளார். அதி​முக-​வில் வெற்றி பெற்​றவர்​களை ராஜி​னாமா செய்ய வைத்து தவெக​வுடன் இணைத்​துக் கொண்ட விஜய்​தான் களவாணி. விஜய் பஞ்ச் டயலாக் மட்​டுமே பேசுகிறார். ஆக்​கப்​பூர்​வ​மான கருத்​துகளை அவர் பேச வேண்​டும். திரா​விட கட்​சிகள் சரி​யில்லை என்று கூறிய​வர், அதி​முக-​வில் வெற்றி பெற்​றவர்​களை தன் கட்​சி​யில் சேர்த்​துக் கொண்​டுள்​ளார்.காங்​கிரஸ் கட்சி சுய லாபத்​துக்​காக திமுக தலை​மையில் வெற்றி பெற்​று, மாற்று அணிக்கு சென்று பதவி பெற்​றுள்​ளனர். இதில் என்ன கொள்கை உள்​ளது. ஏது​மில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை இணைத்துக் கொண்ட விஜய்தான் களவாணி: பழனிசாமி கடும் விமர்சனம்
‘காவலில் இருந்த சபரிவர்மன் மரணத்துக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?’ - திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in