“பாக்யராஜ் இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர்” - இபிஎஸ் புகழஞ்சலி

“பாக்யராஜ் இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர்” - இபிஎஸ் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய பாக்யராஜின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பிரபல திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய கே.பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவரின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

எம்ஜிஆரும் பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டிருந்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“பாக்யராஜ் இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர்” - இபிஎஸ் புகழஞ்சலி
இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in