மனம் தளராதீர்கள்... மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் பூஸ்ட்

மனம் தளராதீர்கள்... மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் பூஸ்ட்
Updated on
1 min read

‘‘மனம் தளர்ந்து விடாதீர்கள், அடுத்து நாம் தான் ஆட்சியை பிடிக்கப் போகிறோம், வலுவான கூட்டணி அமையப் போகிறது’’ என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அவர்களுக்கு பூஸ்ட் கொடுத்து அனுப்பி இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.

தங்களுக்குள் கூட்டணி வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் அதிமுக-வும் தவெக-வும் இத்தனை நாளும் ஒருவரை ஒருவர் பெரிதாக தாக்கிக் கொள்ளாமல் இருந்தன. ஆனால், விஜய்யின் ஈரோடு பிரச்சாரத்துக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு தற்போது இரண்டு கட்சிகளுமே ஒருவர் மீது ஒருவர் விமர்சன கணைகளை காயம்படாமல் வீச ஆரம்பித்திருக்கின்றன. ஆனாலும் பழனிசாமியோ விஜய்யோ இன்னும் ஒருவரை ஒருவர் நேரடியாகத் தாக்கிக் கொள்ளவில்லை.

இதனால், தவெக இனி தங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்று தெரிந்து போன அதிமுக-வினர் பலரும் சோர்ந்து போயிருக்கிறார்கள். அதேபோல் தவெக தரப்பிலும் அதிமுக இல்லை என்றதும் சுறுசுறுப்பு குறைந்து போயிருக்கிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம், கூட்டணி பற்றி பேசிய பழனிசாமி, “இது அதிமுக-வுக்கு மட்டுமல்ல... நம் அனைவருக்குமே மிக முக்கியமான தேர்தல்” என உருக்கமாக பேசியதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசியபோது, “கூட்டத்தில் பழனிசாமி மிக உருக்கமாக பேசினார். ‘நமக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அம்மா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதிக்குப் பிறகு நமக்கு நல்ல காலம் தொடங்க உள்ளது. அடுத்த ஒன்றரை மாத காலம் நாம் தேர்தல் பணிகளைச் செய்யப் போகிறோம். இக்கால கட்டத்தில் இரவு, பகல் பாராது உழைப்போம். அதன் பலனை தேர்தலுக்குப் பிறகு அடைவோம். யாரும் மனம் தளரவேண்டாம். நமக்கு பலமான கூட்டணி அமையப் போகிறது. உறுதியாக நாம் தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம். கடந்த தேர்தலில் சொற்பமான வித்தியாசத் தில் தான் நாம் திமுக-விடம் தோற்றோம். அதேபோல் மீண்டும் நாம் ஏமாந்து விடக்கூடாது’ என்று சொல்லி எங்களை உற்சாகப்படுத்தி வழியனுப்பி வைத்தார்” என்றனர்.

மனம் தளராதீர்கள்... மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் பூஸ்ட்
“திமுக ஆட்சியை எப்படியாவது ஒழித்துக் கட்டுவோம்” - அமித் ஷா ஆவேசம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in