காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ​கா​விரி விவ​காரத்​தில் தமிழக உரிமை​களை முதல்​வர் ஸ்டா​லின் பாது​காக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக பழனி​சாமி, தனது எக்ஸ் தள பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது: தமிழகத்தை பாலை​வன​மாக்க வேண்​டும் என்ற ஒரே குறிக்​கோளோடு கர்​நாடகத்தை ஆளும் காங்​கிரஸ் அரசு செயல்​படு​வது தொடர்​கதை​யாக உள்​ளது. காவிரி​யின் குறுக்கே மேகேதாட்​டு​வில் அணை கட்ட திட்ட அறிக்​கையை தயாரித்து வரும் கர்​நாடக அரசு நேற்று அணையை கட்​டு​வது குறித்து அனைத்து ஏற்​பாடு​களை​யும் செய்ய 30 பேர் கொண்ட உயர்​மட்ட அதி​காரி​கள் குழுவை அமைத்​திருப்​ப​தாக செய்​தி​கள் வரு​கின்​றன.

தமிழக மக்​களின் ஜீவா​தார பிரச்​சினை​யான காவிரி விவ​காரத்​தில் காவிரி மேலாண்மை ஆணை​யத்​தி​லும் உச்ச நீதி​மன்​றத்​தி​லும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான திமுக அரசு தமிழகம் சார்​பில் வலிமை​யான வாதங்​களை வழக்​கறிஞர்​கள் மூலம் எடுத்து வைக்​காமல், "ஏனோ தானோ" என்று செயல்​பட்​ட​தால் இந்த துர்​பாக்​கிய நிலை ஏற்​பட்​டுள்​ளது.

குடும்​பத் தொழிலை பாது​காக்க கர்​நாடக காங்​கிரஸ் அரசுக்கு ஆதர​வாக செயல்​படும் போக்கு கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. திமுக​வின் இந்த துரோகச் செயல் மன்​னிக்க முடி​யாத குற்​ற​மாகும். இனி​யா​வது தமிழக மக்​களுக்கு துரோகம் செய்​யும் நினைப்பை கைவிட்​டு, சட்​டரீ​தி​யான நடவடிக்​கைகளை உடனடி​யாக மேற்​கொண்​டு, காவிரி​யில் தமிழகத்​தின் உரிமை​களை முதல்​வர் ஸ்டா​லின் பாது​காக்க வேண்​டும்​.

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்: 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in