கருணாநிதிக்கு வீட்டு சிறை விவகாரத்தில் என் மீது வழக்கு போடட்டும்: பழனிசாமி சவால்

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உஷாராணியை ஆதரித்து வாழப்பாடியில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உஷாராணியை ஆதரித்து வாழப்பாடியில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

Updated on
2 min read

கருணாநிதி வீட்​டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் விவ​காரத்​தில் என் மீது வழக்கு போடட்​டும் என்​றும் அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் இந்த விவ​காரத்​தில் விசா​ரணை நடத்​தி, நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார்.

சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்​டு, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தமி​ழ​கத்​தில் தேர்​தல் பிரச்சாரத்தை மேற்​கொண்டு வரு​கி​றார். அதன் ஒரு பகு​தி​யாக, சேலம் மாவட்டம் ஏற்​காடு தொகுதி அதி​முக வேட்​பாளர் உஷா​ராணிக்கு ஆதர​வாக வாழப்​பாடி​யில் நேற்று வாக்கு சேகரித்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

பிரச்​சா​ரத்​தின்​போது, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யின்​போது, 2017-ல் கடுமை​யான வறட்​சி, அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்​டங்​களில் புயல் பாதிப்​பு, அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று பாதிப்​பு. கரோனா தொற்​றின்​போது அரசுக்கு ஒரு ரூபாய் கூட வரு​மானம் இல்​லை. வேலை​வாய்ப்பு இல்​லாமல் மக்​கள் வீடு​களில் முடங்​கி​யிருந்​தனர்.

அந்த நிலை​யில் மக்​களுக்கு ரேஷனில் விலை​யில்லா அரிசி, பருப்​பு, சமையல் எண்​ணெய் வழங்​கினோம். ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் தலா ரூ.1,000 வழங்​கினோம். அரசு ஊழியர்​களின் சம்​பளத்​தில் ஒரு ரூபாய் பிடித்​தம் இல்​லாமல் வழங்​கினோம். அப்​போது, பொங்​கல் பண்​டிகைக்கு ரேஷன் கார்​டுக்கு ரூ.2,500 வழங்​கினோம். இவ்​வள​வும் செய்​தோம்.

ஆனால், திமுக ஆட்​சி​யில் வறட்சி வந்​த​தா? புயல் வந்​த​தா? கரோனா வந்​த​தா? எந்த பாதிப்​பும் இல்​லை. மக்​களுக்​கும் எது​வும் செய்யவில்​லை. ஆனால், ரூ.5 லட்​சம் கோடி கடன் வாங்கி வைத்​திருக்​கி​றார்​கள். திமுக அரசின் சாதனை, நம்மை எல்​லாம் கடனாளி​யாக மாற்​றியது தான். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி வீட்டு சிறை​யில் வைக்​கப்​பட்​டிருந்ததாக, திமுக முன்​னாள் அமைச்​சர் ஆ.ராசா தான் ஆடியோ வெளி​யிட்டிருந்​தார். அந்த செய்தி உண்​மை​யாக

இருக்​கலாம். அவர்​மீது நடவடிக்கை எடுக்​க​வில்​லை. அவர் மீது கோபப்​பட்​டால் அடுத்த ஆடியோ வெளியிட்டு விடு​வார் என்று பயம். என்​மீது வழக்கு போடு​வார்​களாம். வழக்கு போடட்​டும். பல வழக்குகளை பார்த்​தவன் நான்.

ஸ்டா​லின், உதயநி​தி, கனி​மொழி என்று ஆளாளுக்கு யார் வேண்​டு​மா​னாலும் பேசட்​டும். திமுக​வுக்கு இது இறு​தித் தேர்​தல் என்று மக்​கள் முடிவு செய்து விட்​டார்​கள். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மரணத்​தில் மர்​மம் உள்​ளது. அந்த உண்​மையை கொண்டு வரு​வோம் என்று எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போது திமுக கூறியது. கண்​டு​பிடித்​து​விட்​டார்​களா?

இப்​போது நான் சொல்​கிறேன். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி வீட்டு சிறை​யில் வைக்​கப்​பட்​ட​தாக கூறப்படும் விவ​காரத்​தில், அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் சட்ட ரீதி​யாக விசா​ரணை நடத்​தி, அதற்கு காரண​மான​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். விவ​சா​யி​களின் பயிர்க்​கடன் தள்​ளு​படி செய்​யப்​படும். பணப்​ப​யிர்​களுக்​கான காப்​பீட்​டுத் தொகை பிரீமி​யம் 5 சதவீதத்​தில் இருந்து 2 சதவீத​மாக குறைக்​கப்​படும். அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் குடிம​ரா​மத்​துத் திட்​டம், அம்மா மினி கிளினிக் உள்​ளிட்ட திமுக​வால் நிறுத்தி வைத்த திட்​டங்​கள் மீண்​டும் செயல்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

<div class="paragraphs"><p>ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் உஷாராணியை ஆதரித்து வாழப்பாடியில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. </p></div>
விஜய் சிலையுடன் ஓட்டுவேட்டை: திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ‘வேற லெவல்’ ஐடியா பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in