‘தமிழக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா?’ - பழனிசாமி பதில்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

Updated on: 
1 min read

ஈரோடு: அதிமுக சார்​பில் தமிழக அரசுக்கு எதிராக நம்​பிக்​கை​யில்லாத் தீர்​மானம் கொண்​டுவரப்​படுமா என செய்​தி​யாளர்​கள் கேள்வி எழுப்​பியதற்கு, ‘எதை பொது வெளி​யில் பேச வேண்​டும், எதை பேசக்​கூடாது என்​ப​தற்கு ஒரு வரைமுறை உள்​ளது. சில கருத்​துகளை இப்​போது தெரி​விக்க முடி​யாது’ என அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி தெரி​வித்​தார்.

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதாவின் பாது​காப்பு அதி​காரியாக பணி​யாற்​றிய பெரு​மாள்​சாமி​யின் இல்​லத் திரு​மண விழா ஈரோட்​டில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற பழனிசாமி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அதிமுக சார்​பில் தமிழக அரசுக்கு எதிராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்​டுவரப்​படுமா என கேட்​கிறீர்​கள்? எதை பொது வெளி​யில் பேச வேண்​டும், எதை பேசக்​கூடாது என்​ப​தற்கு ஒரு வரைமுறை உள்​ளது.

எனவே, சில கருத்​துகளை இப்​போது தெரி​விக்க முடி​யாது. நம்​பிக்​கை​யில்லாத் தீர்​மானம் குறித்து செங்​கோட்​டையன் பேசி​யிருப்​பது அவருடைய தனிப்​பட்ட கருத்து. அத்​தகைய சூழல் வரும்​போது அனைத்து ஊடக நண்​பர்​களை​யும் அழைத்து தெளிவாகத் தெரி​விப்​போம்.

தமிழகத்​தில் சட்​டம்-ஒழுங்கு அடியோடு சீர்​கெட்​டுவிட்​டது என பலமுறை தொலைக்​காட்சி மற்​றும் பத்​தி​ரி​கைகள் வாயி​லாக தெரி​வித்​துள்​ளேன். சட்​டம்-ஒழுங்கு பிரச்​சினை குறித்து முதல்​வர் விஜய் கவனம் செலுத்த வேண்​டும் என சட்​டப்​பேரவை, பத்​தி​ரி​கைகள் மற்​றும் ஊடகங்​கள் வாயி​லாக வலியுறுத்​தி​யுள்​ளோம்.

இந்த அரசு பொறுப்​பேற்​றது முதல் இது​வரை கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்​பறி உள்​ளிட்ட குற்​றச் சம்​பவங்​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. இந்த அரசு கும்​பகர்​ணனைப் போல தூங்​கிக் கொண்​டிருக்​கிறது. எத்​தனை முறை தட்டி எழுப்​பினாலும் விழித்​துக் கொள்​வதில்லை. சட்​டம்-ஒழுங்கை பாது​காப்​ப​தில் திராணி​யற்ற அரசாக உள்​ளது.இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்</p></div>
மதுரை: பிரபல நகைக் கடையில் 35 கிலோ நகைகள் கொள்ளை

X