பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து: மாநில மதிப்பீட்டு ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து: மாநில மதிப்பீட்டு ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: பள்​ளிக்​கரணை ராம்​சர் சதுப்பு நிலத்தை ஒட்​டிய பகு​தி​யில் 1,250 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்ட வழங்​கப்​பட்ட சுற்​றுச்​சூழல் அனு​மதி ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தனி​யார் கட்​டு​மான நிறு​வனம் தொடர்ந்த வழக்​கில், இது தொடர்​பாக மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யம் பதில் அளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை பள்​ளிக்​கரணை ராம்​சர் சதுப்பு நிலத்​தின் அருகே பிரி​கேட் என்ற தனி​யார் கட்​டு​மான நிறு​வனம் 1,250 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்ட முந்​தைய திமுக ஆட்​சி​யில் மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​ய​மும், சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​ம​மும் அனு​மதி வழங்​கி​யிருந்​தன.

இதை எதிர்த்து அறப்​போர் இயக்​கம் சார்​பிலும், அதி​முக தரப்​பிலும் தொடரப்​பட்ட வழக்​கு​களை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், சதுப்பு நிலம் தொடர்​பான வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே நிலு​வை​யில் உள்​ள​தால் இந்த வழக்​கிலும் உச்ச நீதி​மன்​றத்தை நாட உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்​தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்​றளவுக்கு எந்த ஒரு கட்​டு​மானங்​களை​யும் மேற்​கொள்​ளக் கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்​தர​விட்​டது.

மேலும் பிரி​கேட் நிறு​வனத்​துக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்​கப்​பட்ட சுற்​றுச்​சூழல் அனு​ம​தியை ரத்து செய்து மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யம் கடந்த ஜூன் 18-ம் தேதி உத்​தர​விட்​டது. அதைத் தொடர்ந்​து, சிஎம்​டிஏ தரப்​பில் வழங்​கப்​பட்ட அனு​ம​தி​யும் ரத்து செய்​யப்​பட்​டது.

இதை எதிர்த்து பிரி​கேட் நிறு​வனம் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அதில், தங்​களுக்கு வழங்​கப்​பட்ட சுற்​றுச்​சூழல் அனு​ம​தியை ரத்து செய்​யும் முன்​பாக தங்​களது தரப்​பில் எந்​தவொரு கருத்​தை​யும் கோராமல், அதி​காரி​கள் தன்​னிச்​சை​யாக உத்​தரவு பிறப்​பித்​துள்​ளனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்​புடையது அல்ல என்று குறிப்பிட்டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி முகமது ஷபீக், இது தொடர்​பாக மாநில சுற்​றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யம் பதில் அளிக்க உத்​தர​வி்ட்டு வி​சா​ரணை​யை ஜூலை 28-ம்​ தேதிக்​கு தள்​ளி​வைத்​தார்​.

பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து: மாநில மதிப்பீட்டு ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
சாலைகள் சாகசத்துக்கு அல்ல; பயணத்துக்கே: மாணவர்களுக்கு காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in