‘விக்’ ஏற்றுமதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

‘விக்’ ஏற்றுமதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்​னை, மூலக்​கடை பகு​தி​யைச் சேர்ந்த குமார் என்​பவர், கொரட்​டூர், வன்​னியர் 2-வது தெரு​வில் மனித முடி​யில் ‘விக்’ தயாரிக்​கும் நிறு​வனம் ஒன்றை நடத்தி வரு​கிறார். இந்​நிறு​வனம், தனது தயாரிப்​பு​களை வெளி​நாடு​களுக்கு ஏற்றுமதி செய்து வரு​கிறது.

இந்​நிறு​வனம், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​படு​வ​தாக அமலாக்​கத்​துறைக்கு கிடைத்த ரகசி​யத் தகவலின் பேரில், நேற்று காலை கொரட்​டூரில் உள்ள அலு​வல​கம்,மூலக்​கடை​யில் உள்ள குமாரின் வீடு ஆகிய இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்தினர்.

இந்​தச் சோதனை​யில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாகத் தெரி​கிறது. சோதனை​யின் முடி​வில் கூடு​தல் விவரங்​கள் தெரிய வரும் என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

‘விக்’ ஏற்றுமதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் மரியாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in