சென்னை: ரூ.14 லட்சத்தை போலீஸ் பறித்ததாக பொய் கூறி பணத்தை திருடிய ஊழியர் கைது

முகமது தன்ஜீர்

முகமது தன்ஜீர்

Updated on
1 min read

சென்னை: வேலூர் மாவட்​டம் குடி​யாத்​தத்​தைச் சேர்ந்த தன்​வீர் அகமது (37), சென்னை பெரியமேட்​டில் அலுமினிய ஸ்கி​ராப் தொழில் செய்து வரு​கிறார். இவரது கடை​யில் அதே ஊரைச் சேர்ந்த முகமது தன்​ஜீர் (25) என்​பவர் கடந்த 6 மாதங்​களாக வேலை பார்த்து வந்​தார்.

கடந்த 24-ம் தேதி, கோயம்​பேட்​டில் உள்ள ஒரு செல்​போன் கடை​யில் ரூ.14 லட்​சம் பணத்​தைப் பெற்​றுக்​கொண்​டு, அதனை வானகரத்​தில் உள்ள ஒரு நிறு​வனத்​தில் ஒப்​படைக்​கு​மாறு தன்​ஜீரை உரிமை​யாளர் தன்​வீர் அகமது அனுப்​பி​வைத்​துள்​ளார்.

பணத்​தைப் பெற்​றுக்​கொண்ட தன்​ஜீர், நீண்ட நேர​மாகி​யும் அதை ஒப்​படைக்​க​வில்​லை. இதுகுறித்து உரிமை​யாளர் கேட்​ட​போது, “நான் ஆட்​டோ​வில் வந்​த​போது நெற்​குன்​றம் அருகே போக்​கு​வரத்து போலீ​ஸார் வழிமறித்து ரூ.14 லட்​சத்​தை​யும், எனது செல்​போனை​யும் பிடுங்​கிக்​கொண்​டனர்.

பிறகு என்னை மதுர​வாயல் பைபாஸில் இறக்​கி​விட்​டு, பணத்​தைக் காவல் நிலை​யத்​தில் வந்து வாங்​கிக்​கொள்​ளு​மாறு கூறிச் சென்​று​விட்​டனர்” எனப் பதற்​றத்​துடன் கூறி​யுள்​ளார்.

தன்​வீர் அகமது உடனடி​யாக கோயம்​பேடு காவல் நிலையத்​துக்​குச் சென்று இதுகுறித்து விசா​ரித்​தார். அப்​போது, குறிப்​பிட்ட நேரத்​தில் அந்​தப் பகு​தி​யில் போலீ​ஸார் யாரும் சோதனை​யில் ஈடு​பட​வில்லை என்​பதும், அது​போன்ற பறி​முதல் நடவடிக்கை எது​வும் நடக்​க​வில்லை என்​பதும் தெரிய​வந்​தது.

இதனால் சந்​தேகமடைந்த போலீ​ஸார், தன்​வீர் அகமது அளித்த புகாரின் பேரில் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். சம்​பவம் நடந்​த​தாகக் கூறப்​படும் பகு​தி​யில் இருந்த சிசிடிவி காட்​சிகளை போலீ​ஸார் ஆய்வு செய்​த​போது, போலீ​ஸார் மறித்​த​தாகக் கூறப்​படும் தகவல் முற்​றி​லும் பொய் என்​பது உறு​தி​யானது.

இதையடுத்​து, முகமது தன்​ஜீரிடம் போலீ​ஸார் தங்​களது பாணி​யில் கிடுக்​கிப்​பிடி விசா​ரணை நடத்​தினர். முதலில் மழுப்​பிய தன்​ஜீர், பின்​னர் போலீ​ஸாரின் தீவிர விசா​ரணை​யில் தான் ஆடிய நாடகத்தை ஒப்​புக்​கொண்​டார்.

தன்​ஜீர் திருடிய ரூ.14 லட்​சத்​தை​யும் பொன்​னேரி​யில் உள்ள ஒரு வீட்​டில் ரகசி​ய​மாக மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

உடனடி​யாக விரைந்து சென்ற போலீ​ஸார், மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த பணத்தை மீட்​டனர். தொடர்ந்து முகமது தன்​ஜீரை கைது செய்து நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர்​.

<div class="paragraphs"><p>முகமது தன்ஜீர்</p></div>
‘சென்னை ஒன்’ செயலி மூலம் வெளியூர் பஸ் டிக்கெட் பெறும் வசதி: போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in