‘சென்னை ஒன்’ செயலி மூலம் வெளியூர் பஸ் டிக்கெட் பெறும் வசதி: போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்

‘சென்னை ஒன்’ செயலி மூலம் வெளியூர் பஸ் டிக்கெட் பெறும் வசதி: போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: வெளியூர் பேருந்​துகளுக்​கான டிக்​கெட்​டு​களை ‘சென்னை ஒன்’ செயலி​யில் பெறும் வசதி விரை​வில் அறி​முகப்​படுத்​தப்​பட​வுள்​ள​தாக போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்​னை​யில் போக்​கு​வரத்து சேவை​களை ஒருங்​கிணைப்​ப​தற்​காக, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம் (கும்​டா) ஏற்​படுத்​தப்​பட்​டது. இந்த குழு​மம் வாயி​லாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி உரு​வாக்​கப்​பட்டு கடந்த செப்​.22-ம் தேதி​முதல் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த செயலி வாயி​லாக மெட்ரோ ரயில், மின்​சார ரயில், மாநகரப் பேருந்​துகளில் பயணிப்​ப​தற்​கான டிக்​கெட்​டு​களை க்யூஆர் குறி​யீடு வழி​யாக பெறலாம். இந்த 3 சேவை​களுக்​கும் சேர்த்து அல்​லது தனித் தனி​யாக​வும் மக்​கள் இந்த செயலி​யில் டிக்கெட் பெற முடி​யும்.

இந்த செயலியை 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயணி​கள் பயன்​படுத்தி வரு​கின்​றனர். இச்​செயலி மூலம் மாநகரப் பேருந்​துகளில் ரூ.1,000, ரூ.2,000-க்​கான மாதாந்​திர பேருந்து பயண அட்​டைகளை, ‘டிஜிட்​டல்’ வடி​வில் பெறும் வசதி உள்ள நிலை​யில், மெட்ரோரயில், மின்​சார ரயில் ஆகிய​வற்​றுக்​கான மாதாந்​திர பயணச் சீட்​டு​களை, இந்த செயலி​யில் பெற வசதி ஏற்​படுத்​தப்பட உள்​ளது.

இதற்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்ற நிலை​யில், அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழகம், விழுப்​புரம் கோட்ட அரசு போக்​கு​வரத்​துக் கழகம் ஆகிய​வற்​றின் பேருந்​துகளில் பயணிக்க, சென்னை ஒன் செயலி​யில் டிக்​கெட் எடுக்​கும் வசதியை விரை​வில் அறி​முகப்​படுத்த போக்​கு​வரத்​துத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

இதுகுறித்து போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: மாநகரப் பேருந்​துகளைப் போல, வெளியூர் செல்​லும் பேருந்​துகளுக்​கும் டிக்​கெட் எடுக்​கும் வசதி ஏற்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டது.

இதற்​கான நடை​முறை​கள் குறித்​து, சென்னை ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து குழு​மம், அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழகம், விழுப்​புரம் போக்​கு​வரத்​துக் கழகம் மற்​றும் போக்​கு​வரத்​துத் துறை அதி​காரி​கள் மத்​தி​யில் பேச்சு நடத்​தப்​பட்​டுள்​ளது.

இதற்​கான புதிய மென்​பொருள் தயாரிக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. வெளியூர் பேருந்​துகளில் ஜிபிஎஸ் வசதியை ஏற்​படுத்த வேண்​டும். அதன் அடிப்​படை​யில் புதிய மென்​பொருள் தயாரிக்​கும் பணி​கள் நடந்து வரு​கின்​றன. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

‘சென்னை ஒன்’ செயலி மூலம் வெளியூர் பஸ் டிக்கெட் பெறும் வசதி: போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்
சென்னையில் 4.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in