கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும்: மின்வாரிய கேங்மேன்கள் வலியுறுத்தல்

கேங்க்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வலியுறுத்தி, மின்வாரிய ஊழியர்கள், சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமையகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |படம்: ம.பிரபு | 

கேங்க்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வலியுறுத்தி, மின்வாரிய ஊழியர்கள், சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமையகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: கேங்மேன் பணி​யாளர்​களை கள உதவி​யாள​ராக மாற்ற வேண்​டும் என வலி​யுறுத்​தி, மின்​வாரிய கேங்மேன்கள் போராட்​டத்​தில் ஈடுப்​பட்​டனர்.

சென்​னை, அண்ணா சாலை​யில் உள்ள மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில், தமிழ்​நாடு மின்​வாரிய கேங்மேன் மற்​றும் பணி​யாளர்​கள் சங்​கத்​தின் சார்​பில், ஒரே வேலைக்கு 2 பதவி என்ற ஏற்​றத் தாழ்​வு​களை களைந்​து, கேங்மேன் பணி​யாளர்​களை கள உதவி​யாள​ராக மாற்ற வேண்​டும் என வலி​யுறுத்​தி கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

அனைத்து கேங்மேன் பணி​யாளர்​களை​யும் உடனடி​யாக கள உதவி​யாளர்​களாக மாற்ற வேண்​டும். 100 சதவீதம் விருப்ப ஊர் மாறு​தல் உத்​தரவு உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, நூற்​றுக்​கும் மேற்​பட்ட கேங்மேன்கள் ஆர்ப்​பாட்​டத்​தில் கோஷங்​களை எழுப்​பினர்.

அதனைத் தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களை சந்​தித்த சங்​கத்​தின் மாநில அமைப்​பாளர் லிங்​கேஸ்​வரன், “நான்​கரை ஆண்​டு ​களாக கேங்மேன் பணி​யாளர்​களாக இருந்து வரு​கிறோம். 2 ஆண்​டு பயிற்சி காலத்​தில் ரூ.15 ஆயிரம் மாத ஊதி​ய​மாக வழங்​கப்​பட்​டது.

அதன் பின்னர் ஊதி​ய​மாக ரூ.16,500 மட்​டுமே வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதனால், வாழ்​வா​தா​ரம் பெரும் சிக்​கலாக இருக்​கிறது. கேங்மேன் என்ற பதவியை நீக்கி கள உதவி​யாளர் பதவியை அனை​வருக்​கும் வழங்க வேண்​டும்.

பல ஆண்​டு​களாக எங்​கள் கோரிக்கை முன் வைத்​தும் இந்த அரசும், மின்​வாரிய​மும் கண்டு கொள்​ள​வில்​லை. எங்​கள் கோரிக்கை நிறைவேற்​றும் வரை இங்கே தொடர் போராட்​டத்​தில் ஈடுபட உள்​ளோம்” என தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>கேங்க்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வலியுறுத்தி, மின்வாரிய ஊழியர்கள், சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமையகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |<em>படம்: ம.பிரபு</em> |&nbsp;</p></div>
வாடிக்கையாளர்களைப் போல் நடித்து சூப்பர் மார்க்கெட்டில் திருடிய 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in