பழநியில் மின் இழுவை ரயில் சேவை பாதிப்பு: பக்தர்கள் தவிப்பு

பழநியில் மின் இழுவை ரயில் சேவை பாதிப்பு: பக்தர்கள் தவிப்பு
Updated on
1 min read

பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் மின் இழுவை (வின்ச்) ரயில்களுக்கு மின் வினியோகம் வழங்கும் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 5.30 மணி முதல் வின்ச் ரயில் சேவை பாதித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் செல்லும் வகையில் 3 மின் இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ரூ.10 மற்றும் ரூ.50-ம், மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கு ரூ.10 மற்றும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தினமும் காலை 5.30 முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்லவும், மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கு வரவும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை 5.30 மணிக்கு வழக்கம்போல் மின் இழுவை (வின்ச்) ரயில் சேவையை தொடங்கும் போது, இந்த ரயில்களை இயக்குவதற்கு மின் வினியோகம் வழங்கும் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு, மின் கசிவு காரணமாக மின் இழுவை ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் கோளாறை சரிசெய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் ரோப் கார் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியது.

வார விடுமுறையையொட்டி, அதிகாலை முதலே பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. மின் இழுவை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்ல முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் இதர பக்தர்கள் ரோப் காரில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பழநியில் மின் இழுவை ரயில் சேவை பாதிப்பு: பக்தர்கள் தவிப்பு
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி. கைது - வேலியே பயிரை மேய்வதாக அன்புமணி வேதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in