

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் சூலூர்பேட்டை யார்டில் பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டைக்கு வரும் 19, 21 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், எளாவூர்-சூலூர்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு மேற்கண்ட நாட்களில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் மெமு ரயில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், மைலம் - திண்டிவனம் இடையே பொறியியல் பணி காரணமாக, தாம்பரம் - விழுப்புரம் மெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, தாம்பரம் - விழுப்புரத்துக்கு வரும் 17, 19, 21 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில், திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரம் - சென்னை கடற்கரைக்கு மேற்கண்ட நாட்களில் மதியம் 1.30 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில், விழுப்புரம் - திண்டிவனம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.