கோடம்பாக்கம் தீர்க்கபுரீஸ்வரர், அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்.

Updated on
2 min read

சென்னை: கோடம்​பாக்​கம் தீர்க்​கபுரீஸ்​வரர், அங்​காள பரமேஸ்​வரி அம்​மன் கோயில்​களில் மகா சிவராத்திரி விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

சென்னை கோடம்​பாக்​கம் புலியூர் வன்​னியர் தெரு​வில் உள்ள பால​வி​நாயகர், பால​முரு​கன், சொர்​ணாம்​பிகை சமேத தீர்க்​கபுரீஸ்​வரர் கோயி​லில் மகா சிவராத்திரி விழா கடந்த 8-ம் தேதி தொடங்​கியது.

மகா சிவராத்திரி நாளான நேற்று காலை மகா கணபதி பூஜை, மகா சங்​கல்​பம், கலச ஆவாஹனம், ஏகாதசி ருத்ர பாராயணம், மகா அபிஷேகம், ருத்ர ஹோமம், வசோத்ரா ஹோமம், பூர்​ணாஹு​தி, ஏகாதச ருத்​ராபிஷேகம், மகா தீபா​ராதனை ஆகியவை நடை​பெற்​றன.

அதைத் தொடர்ந்​து, நான்​கு​கால அபிஷேகம், சுவாமிக்கு அலங்​காரம், தீபா​ராதனை நடை​பெற்​றது. இரவு முழு​வதும் நடை​பெற்ற பூஜை​யில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர்.

இதே​போல, கோடம்​பாக்​கம் ஆண்​ட​வர் நகரில் உள்ள அங்​காள பரமேஸ்​வரி அம்​மன் கோயி​லில் 27-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று விமரிசை​யாக நடை​பெற்​றது. காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்​காரம், தீபா​ராதனை நடை​பெற்​றது. மாலை 6 மணிக்கு சப்​தகன்னி வழி​பாடு, கபாலி பூஜை ஆகியவை நடை​பெற்​றன. இதில் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்.

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் நேற்று இரவு முழு​வதும் சிறப்பு அபிஷேகங்​கள், வழி​பாடு​கள் மற்​றும் நான்கு கால பூஜைகள் நடை​பெற்​றன. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்டு கபாலீஸ்​வரர் மற்​றும் கற்​ப​காம்​பாளை தரிசனம் செய்​தனர்.

<div class="paragraphs"><p>கோடம்பாக்கத்தில் உள்ள பாலவிநாயகர், முருகன், சொர்ணாம்பிகை சமேத தீர்க்கபுரீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன. | கோடம்பாக்கத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. <em>| படங்கள்: எஸ்.சத்தியசீலன் |</em></p></div>

கோடம்பாக்கத்தில் உள்ள பாலவிநாயகர், முருகன், சொர்ணாம்பிகை சமேத தீர்க்கபுரீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடைபெற்றன. | கோடம்பாக்கத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

வடபழனி முரு​கன் கோயி​லில் நேற்று இரவு முதல்​கால பூஜை​யுடன் விழா தொடங்​கியது. தொடர்ந்​து, 2 மணி நேரத்​துக்கு ஒரு​முறை பூஜைகள் நடை​பெற்​றன. மேலும், இசை நிகழ்ச்​சிகள், பஜனை​களும் நடை​பெற்​றன.

புரசை​வாக்​கம் கங்​காதீஸ்​வரர் கோயி​லில் மகா சிவராத்திரியை முன்​னிட்டு அனைத்து பக்​தர்​களுக்​கும் கங்கா தீர்த்​தம், உத்​தி​ராட்சை உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டன. பரத​நாட்​டி​யம் உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்ச்​சிகள் விடிய விடிய நடை​பெற்​றன.

இதே​போல, திரு​வான்​மியூர் மருந்​தீஸ்​வரர், திரு​வொற்​றியூர் தியாக​ராஜ சுவாமி, பாடி திரு​வல்​லீஸ்​வரர், வேளச்​சேரி தண்​டீஸ்​வரர், மாடம்​பாக்​கம் தேனுபுரீஸ்​வரர், பள்​ளிக்​கரணை ஆதிபுரீஸ்​வரர் உட்பட சென்னை மற்​றும் புறநகரில் உள்ள சிவால​யங்​களில் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. பக்தி பாடல்​கள், பரத​நாட்​டி​யம் மற்​றும் ஆன்​மிகச் சொற்​பொழி​வு​கள் நடை​பெற்​றன. பக்​தர்​கள் விடிய விடிய விழித்​திருந்து ‘நமச்​சி​வாய’ முழக்​கத்​துடன் சிவனை வழிபட்டனர்.

<div class="paragraphs"><p>சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்.</p></div>
முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய பிரேமலதா வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in