புதுச்சேரி, அசாம், கேரளாவில் இன்று தேர்தல்: வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடக்கம்

பாதுகாப்புக்குத் துணை ராணுவப் படையினர் குவிப்பு
அசாம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று தங்களது வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருட்களுடன் காம்ரூப்பில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் படகில் பயணிக்கும் தேர்தல் அதிகாரிகள். அப்போது, பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ

அசாம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று தங்களது வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருட்களுடன் காம்ரூப்பில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் படகில் பயணிக்கும் தேர்தல் அதிகாரிகள். அப்போது, பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ

Updated on
2 min read

திருவனந்தபுரம் / புதுச்சேரி: புதுச்​சேரி மற்​றும் கேரளா, அசாம் மாநிலங்​களுக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இன்று நடை​பெறுகிறது. வாக்​குப்​ப​திவு காலை 7 மணிக்​குத் தொடங்கிமாலை 6 மணி வரை நடக்​கிறது. பாதுகாப்புக்குத் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்​சேரி மற்​றும் தமிழகம், கேரளா, அசாம், மேற்​கு​வங்​கம் ஆகிய 5 மாநிலங்​களில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. இவற்​றில் தமிழகத்​துக்கு ஏப்​.23-ம் தேதி​யும் மேற்கு வங்​கத்​தில் ஏப்​.23 மற்​றும் ஏப்​.29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக​வும் தேர்​தல் நடை​பெறுகிறது. புதுச்​சேரி மற்​றும் கேரளா, அசாம் மாநிலங்​களில் இன்று தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான பிரச்​சா​ரம் கடந்த செவ்​வாய்க்​கிழமை மாலை முடிந்​தது. இந்​நிலை​யில், 3 மாநிலங்​களி​லும் மொத்​தம் உள்ள 296 தொகு​தி​களுக்​கு இன்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது.

வாக்​குப்​ப​திவு நேரம்: புதுச்​சேரி மற்​றும் கேரளா, அசாமில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. தேர்​தல் அமை​தி​யாக நடை​பெறு​வதை உறுதி செய்​யும் வகை​யில் போது​மான முன்​னேற்​பாடு​களைத் தேர்​தல் ஆணை​யம் செய்​துள்​ளது. அமை​தி​யான முறை​யில் தேர்​தலை நடத்த பாது​காப்​புப் படை​யினரும் கண்​காணிப்​பாளர்​களும் போது​மான அளவில் தேர்​தல் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். பதற்றமான தொகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா: கேரளாவைப் பொறுத்​தவரை மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு இன்று தேர்​தல் நடை​பெறுகிறது. இதில் 883 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். இங்​கு, கடந்த 2016 முதல் பின​ராயி விஜயன் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணி (எல்​டிஎப்) தொடர்ந்து 2 முறை ஆட்​சி​யில் உள்​ளது. இந்​நிலை​யில், ஹாட்​ரிக் வெற்​றியைப் பெற எல்​டிஎப் தீவிர​மாக களத்​தில் உள்​ளது.

ஆளும் கூட்​ட​ணிக்கு எதி​ராக, சதீஷன் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎப்) மற்​றும் பாஜக​வின் ராஜீவ் சந்​திரசேகர் தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆகியவை உள்​ளன. இம்​மாநிலத்​தில் மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.கேரளா​வில் இன்று நடை​பெறவுள்ள தேர்​தலில் 2.71 கோடி வாக்​காளர்​கள் வாக்​களிக்க உள்​ளனர். இதில் 1.32 கோடி ஆண் வாக்​காளர்​களும், 1.39 கோடி பெண் வாக்​களர்​களும், 2.42 லட்​சம் வெளி​நாட்​டில் வசிக்​கும் கேரள வாக்​காளர்​களும் அடங்​கு​வர்.

அசாம்: அசாமில் 126 தொகு​தி​களுக்கு இன்று ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. இங்கு ஹிமந்த பிஸ்வா சர்மா தலை​மையி​லான பாஜக மற்​றும் கவுரவ் கோகோய் தலை​மையி​லான காங்​கிரஸ் கூட்​ட​ணி​களுக்கு இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது. கடந்த ஒரு மாத கால​மாக தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் அனல் பறந்​தது. மாநிலத்​தில் மொத்​தம் 2.49 கோடி வாக்​காளர்​கள் உள்​ளனர்.

புதுச்​சேரி: புதுச்​சேரி​யில் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் 294 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 9.50 லட்​ச​மாக உள்​ளது. இதில் புதிய வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 24,919 ஆகும். புதுச்​சேரி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள 1,099 வாக்​குச்​சாவடிகளில் 209 வாக்​குச்​சாவடிகள் பதற்​றம் நிறைந்​தவை​யாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன.

புதுச்​சேரியைப் பொறுத்த வரை​யில் ரங்​க​சாமி தலை​மையி​லான ஆளும் என்​.ஆர். காங்​கிரஸ் - பாஜக கூட்​ட​ணிக்​கும், வைத்​திலிங்​கம் தலை​மையி​லான காங்​கிரஸ் - திமுக கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது.

புதிய வரவு: புதி​தாக வந்​துள்ள நடிகர் விஜய்​யின் தவெக புதுச்​சேரி தேர்​தலில் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. முதலில் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், பின்னர் சுயேச்சை ஆதரவுக் குழுவுடன் இணைந்து அக்கட்சி தேர்தலை சந்திக்கிறது. அசாம், கேரளா, புதுச்சேரி தேர்தல் முடிவுகள் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ளன.

<div class="paragraphs"><p>அசாம் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று தங்களது வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பொருட்களுடன் காம்ரூப்பில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் படகில் பயணிக்கும் தேர்தல் அதிகாரிகள். அப்போது, பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ</p></div>
தலைமைச் செயலராக சாய்குமார் பொறுப்பேற்பு: லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக சந்தீப் மிட்டல் பதவியேற்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in