

கோப்புப் படம்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு கும்பகோணம் வழியாக தேர்தல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) தாம்பரத்தில் இருந்து ஏப்.22-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணத்தை இரவு 8.18 மணிக்கு அடைந்து, அங்கிருந்து பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக மறுநாள் காலை 5.30 மணிக்கு செங்கோட்டையைச் சென்றடையும்.
தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் (06018) ஏப்.20, 27 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம் வழியாக கும்பகோணத்தை மறுநாள் காலை 7 மணிக்கு அடைந்து, அங்கிருந்து மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வழியாக பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும்.
தாம்பரம்- தூத்துக்குடி (06017) ஏப்.21, 28 ஆகிய தேதிகளில் தாம்பத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு, கும்பகோணத்தை 8.18 மணிக்கு அடைந்து, அங்கிருந்து பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடியை மறுநாள் காலை 4.30 மணிக்குச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.