தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: தோழர்கள் டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன் குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொது மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு “பாலன் இல்லம்” எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தியாகராயா நகர், சென்னை - 600 017, அலைபேசி எண்: 98408 54707, மின்னஞ்சல்: cpi.tamilnadu@gmail.com

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை: வேதாந்தா தலைவர் அனில் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in