‘‘இந்திய தேர்தல் ஆணையமும் மாநில தேர்தல் ஆணையங்களும் இணைந்து செயல்பட வேண்டும்’’: தேர்தல் ஆணையர்

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

Updated on
2 min read

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மற்றும் மாநில தேர்தல் ஆணையர்களின் (SECs) தேசிய வட்டமேசை மாநாடு 2026, புதுடெல்லியில் நிறைவடைந்தது. சட்டப்பூர்வ கட்டமைப்பின்படி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் தேர்தல் நடத்தலில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மாநில தேர்தல் ஆணையர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று பாரத் மண்டபம், புதுடெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்களின் (SECs) தேசிய வட்டமேசை மாநாட்டை ஏற்பாடு செய்தது.

இம்மாநாட்டை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி முன்னிலையில் தலைமை தாங்கினார்.

தமது தொடக்க உரையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இடையிலான நிறுவன ஒருங்கிணைப்பை அவற்றின் அரசியலமைப்பு ஆணைகளுக்கு வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். நாட்டில் தேர்தல் செயல்முறைகளின் நேர்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்த வாக்காளர் பட்டியல் மேலாண்மை, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதில் இணக்கமான அணுகுமுறைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.எஸ். சந்து, மாநில தேர்தல் ஆணையங்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தல் செயல்முறையின் அடித்தளம் நம்பிக்கையே என்பதால், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷி, டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களின் செயல்பாடுகளுக்கு இடையே பாலங்களை உருவாக்க ECINET டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த விவாதங்கள் ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை வழங்கின. மேலும் தேர்தல் நிர்வாகத்தில் கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்தின. பங்கேற்பாளர்கள் தேசிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, தூய்மையான வாக்காளர் பட்டியல்களை தயாரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை என உறுதியுற்றனர்.

மேலும், பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான சட்டங்களை, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான சட்டங்களுடன் ஒருங்கிணைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்களுடன் இணைந்து செயல்படும் என்றும், தேசிய மற்றும் அரசியல் சட்ட நலனை மேம்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையர்களுடன் இணைந்து செயல்படும் என்றும் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநாட்டின் போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய வெளியீடான ‘ஜனநாயகங்களின் சங்கமம்’ வெளியிடப்பட்டது. இந்த வெளியீடு சமீபத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை மாநாடு (IICDEM) 2026-இன் விரிவான பதிவாகும். 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்த சுமார் 100 சர்வதேச பிரதிநிதிகள், தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்பு, 36 தலைப்புச் சார் அமர்வுகள், இருதரப்பு கூட்டங்களில் நடந்த விவாதங்கள் மற்றும் டெல்லி பிரகடனம் 2026-ஐ முறையாக ஏற்றுக்காண்டது ஆகியவற்றை ஆவணப்படுத்துகிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக நடைபெற்ற தேசிய வட்டமேசை மாநாடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ECINET மற்றும் வாக்காளர் பட்டியல் பகிர்வு போன்ற தொழில்நுட்ப தீர்வுகளைப் பகிர்வதன் மூலம் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கு வழிவகுக்கிறது.

<div class="paragraphs"><p>இந்திய தேர்தல் ஆணையம்</p></div>
அடையாளத்தை மறைச்சு அரசியல் செய்யாதீங்க | Kasturi Exclusive Interview | Talks about Seeman #சீமான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in