சென்னை காவல் ஆணையரை மாற்றியது தேர்தல் ஆணையம்: தினேஷ் மோடக் பொறுப்பேற்பு

ஆணையராக பதவியேற்ற மோடக்.

ஆணையராக பதவியேற்ற மோடக்.

Updated on
1 min read

சென்னை: சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்டு, புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக்கை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக பொறுப்பேற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை நடுநிலையோடும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகை​யில் ஏற்​கெனவே, விருதுநகர், நாமக்​கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.​பி.க்​கள் மாற்​றப்​பட்​டனர். கடந்த 2-ம் தேதி தலை​மைச் செயல​ராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமாரும், சட்​டம் - ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்​கடராமன் மாற்றப்​பட்டு சந்​தீப் ராய் ரத்​தோரும் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணையும் மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக, தவெகவினர் மனு அளித்தனர். இந்நிலையில், அருணுக்கு பதிலாக சென்னை காவல் ஆணையராக, அமலாக்கப் பிரிவு (மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நுண்ண

றிவு பிரிவு) கூடுதல் டிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோடக்கை பணியமர்த்தி தேர்தல் ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோடக் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

<div class="paragraphs"><p>ஆணையராக பதவியேற்ற மோடக்.</p></div>
இணையத்தில் கசிந்தது ‘ஜனநாயகன்’ - விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி; டிஜிபியிடம் புகார்: முழு விவரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in