பண பலத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்

பண பலத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பண பலத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல்களில் அதிக செலவு செய்யும் மாநிலமாக தமிழகத்தை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிக செலவு செய்யப்படுவதை உறுதி செய்து, தேர்தலையே தேர்தல் ஆணையம் நிறுத்தியது. அப்போது அரசியல் வாதிகளிடம் இருந்து கோடி கோடியாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2017-ல் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், பணப் பட்டுவாடா நடைபெறுவதை உறுதி செய்து, அந்த தேர்தலையும் தேர்தல் ஆணையம் நிறுத்தியது. இதற்கிடையில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகள் அதிக செலவு செய்யக் கூடிய தொகுதிகளாக தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

வழக்கமாக இரு தொகு திகளுக்கு ஒரு செலவினப்பார் வையாளரை நியமிக்கும் தேர்தல் ஆணையம், இந்த முறை 151 செலவினப் பார்வையாளர்களை நியமித்துள்ளது. இந்த முறை தமிழகத்தில் பண பலமின்றி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. அதற்காகவே மாநில அளவில் தேர்தல் சிறப்புப் பார்வையாளராக பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்காத நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்பிக்கள் - சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையர்கள் உள்ளிட்டோருடன் சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநில காவல் துறை ஒருங்கிணைப்பு அதிகாரி பிரவீன் குமார் அபினபு ஆகியோர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத் தில், 4 மாவட்ட பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்களின் கண்காணிப்புப் பணிகள், அவற்றின் முன்னேற்றம், கண்காணிப்பில் புகுத்தப்பட்ட புதுமைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்தார்.

தொடர்ந்து,"விதிகளை மீறி பணபலத்தைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில், கண்காணிப்புப் பணிகள் இருக்க வேண்டும். அதற்கேற்ப கண்காணிப்பை வரும் நாட்களில் தீவிரப்படுத்த வேண்டும்" என்று அவர் கூட்டத்தில் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண பலத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்
‘என்டிஏ’வுக்கு சேதாரமா? - ராமதாஸ், சசிகலா கூட்டணி ‘அஜெண்டா’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in