

சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1992 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான ரத்தோர், தற்போது பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல, தமிழகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிருந்தா தேவி மாற்றப்பட்டு, அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த இளம் பகவத் மாற்றப்பட்டு, விஷ்ணு மகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காவல் ஆணையராக இருந்த லோகநாதன் மாற்றப்பட்டு, அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.