உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம்

உத்திரமேரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் க.சுந்தர்.

உத்திரமேரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் க.சுந்தர்.

Updated on
2 min read

உத்திரமேரூர் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் தேர்​தல் பிரச்​சா​ரம் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்​ளது. திமுக சார்​பில் க.சுந்​தர், பாமக சார்​பில் பெ.மகேஷ் குமார், நாம் தமி​ழர் கட்சி சார்​பில் ‘மரம்’ மாசிலாமணி, தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் முனிரத்​தினம் மற்​றும் சுயேச்​சைகள் என 14 பேர் களத்​தில் உள்​ளனர்.

திமுக - சமூக நலத்​திட்​டங்​கள் முதன்மை

திமுக சார்​பில் போட்​டி​யிடும் க.சுந்​தர், ஏற்​கெனவே 5 முறை வெற்றி பெற்​றுள்​ளார். தொகு​தி​யில் ஒரு கிரா​மத்​தில் இருக்​கும் தொண்​டரைக்கூட பெயர் சொல்லி அழைக்​கும் அளவுக்கு மக்​களிடம் நெருங்​கிப் பழகும் தன்மை கொண்​ட​வர்.

திமுக அரசின் சமூக நலத்​திட்​டங்​களை மக்​கள் மத்​தி​யில் கொண்டு சென்று வாக்கு சேகரித்து வரு​கி​றார். குறிப்​பாக மகளிர் உரிமைத் தொகை, உத்​திரமேரூர் பகு​தி​யில் மேம்​படுத்​தப்​பட்ட உள்​கட்​டமைப்பு வசதி​களைச் சுட்​டிக்​காட்டி பிரச்​சா​ரம் செய்து வரு​கி​றார்.

மேலும், உத்​திரமேரூரில் புதிய பேருந்து நிலை​யம், நவீன விவ​சாயக் கிடங்​கு​கள், கல்வி நிலை​யங்​கள் அமைப்​ப​தாக அவர் வாக்​குறுதி அளித்து வரு​கி​றார்.

கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக வேட்பாளர் பெ.மகேஷ் குமார்.

கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக வேட்பாளர் பெ.மகேஷ் குமார்.

பாமக - குறை​களைச் சுட்​டிக்​காட்டி பிரச்​சா​ரம்

அதி​முக கூட்​ட​ணி​யில் பாமக சார்​பில் போட்​டி​யிடும் பெ.மகேஷ் குமார், கூட்​ட​ணிக் கட்​சி​களின் உதவி​யுடன் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கி​றார்.

இவர் ஏற்​கெனவே காஞ்​சிபுரம் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டுத் தோல்வி அடைந்​தவர். தனது பிரச்​சா​ரத்​தில், திமுக அரசின் குறை​களைச் சுட்​டிக்​காட்டி வாக்கு சேகரிக்​கி​றார். மேலும், மத்​திய பாஜக அரசின் சாதனை​களைக் கூறி​யும் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வரு​கி​றார்.

நாதக - சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, விவ​சா​யம் முதன்மை

நாம் தமி​ழர் கட்சி வேட்​பாளர் மரம் மாசிலாமணி, மண் வளம், சுற்​றுச்​சூழல் பாது​காப்பை பிரச்​சா​ரத்​தின் மையப்​பொருளாகக் கொண்​டுள்​ளார்.

நடந்தே சென்று மக்களைச் சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘மரம்’ மாசிலாமணி.

நடந்தே சென்று மக்களைச் சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ‘மரம்’ மாசிலாமணி.

தற்சார்பு பொருளா​தா​ரம், இயற்கை விவ​சா​யம், இளைஞர்​களுக்​குத் திறன் மேம்​பாட்டுப் பயிற்சி என உறுதி தந்து, நடந்தே மக்​களை சந்​தித்து வரு​கி​றார்.

தவெக - மாற்று அரசி​யலை முன்​னிறுத்​தல்

தவெக சார்​பில் களமிறங்​கி​யுள்ள முனிரத்​தினம், மாற்று அரசி​யலை முன்​னிறுத்​தி​யும் உள்​ளூர் வேலை​வாய்ப்​பு​களைப் பெருக்​கப் பாடு​படு​வேன் எனவும் உறுதி அளிக்​கி​றார். புதிய அரசி​யல் மாற்​றத்​துக்​காகத் தமக்கு வாய்ப்பு வழங்​கு​மாறு கோரிக்கை விடுத்து வரு​கி​றார்.

உத்திரமேரூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ள தவெக வேட்பாளர் முனிரத்தினம்.

உத்திரமேரூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட் டுள்ள தவெக வேட்பாளர் முனிரத்தினம்.

உத்திரமேரூர் தொகுதியில், தேர்​தல் நாள் நெருங்க நெருங்க வேட்​பாளர்​களின் பிரச்​சா​ரம் உக்​கிரமடைந்து வரு​கிறது. இதனால் தேர்​தல் களம் பரபரப்​படைந்​துள்​ளது.

உத்திரமேரூர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக வேட்பாளர் க.சுந்தர்.

கணிக்க முடியாத காரைக்குடி தொகுதியில் கலக்கப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in