எல்நினோ பாதிப்பு: கனமழை, கடும் வெப்பத்தை தடுக்க நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

எல்நினோ பாதிப்பு: கனமழை, கடும் வெப்பத்தை தடுக்க நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
Updated on
1 min read

சென்னை: எல்​நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்​வால் ஏற்​படக்​கூடிய பாதிப்​பு​களை முன்​கூட்​டியே கணித்​து, அறி​வியல் அடிப்​படையி​லான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்ள தமிழக அரசு நிபுணர் குழு அமைத்​தது.

இந்​தக் குழு தனது முதல்​கட்ட பரிந்​துரைகளை தமிழக அரசிடம் வழங்​கி​யுள்​ளது. அதில் ‘எல்​நினோவை வறட்​சி​யுடன் மட்​டும் தொடர்​புபடுத்​தாமல், கனமழை, வெள்​ளம், புயல் மற்​றும் கடும் வெப்​பம் உட்பட பல்​வேறு பேரிடர்​களை கருத்​தில் கொண்டு தயார்​நிலை நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்.

வடகிழக்​குப் பரு​வ​மழைக்கு முன்​ ஆறுகள், கால்​வாய்​கள், குளங்​களை தூர்​வார வேண்​டும். நிவாரண மையங்​களை அமைத்து, அவசர​கால தொடர்பு, எச்​சரிக்கை தகவல்​களை காட்​சிப்படுத்த வேண்​டும்’ உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்​பெற்​றுள்​ளன.

எல்நினோ பாதிப்பு: கனமழை, கடும் வெப்பத்தை தடுக்க நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
மதுரைக்கு செப். 28-ம் தேதி வருகை தரும்போது மீனாட்சி அம்மனை தரிசிக்க முதல்வர் விஜய் திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in