விமான நிலைய திட்டம்: அச்சத்துக்கு விடிவு பிறக்குமா? - நம்பிக்கையுடன் வாக்களித்த ஏகனாபுரம் மக்கள்

விமான நிலைய திட்டம்: அச்சத்துக்கு விடிவு பிறக்குமா? - நம்பிக்கையுடன் வாக்களித்த ஏகனாபுரம் மக்கள்
Updated on
1 min read

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்தூரில் விமான நிலை​யம் அமைவதற்கு எதிர்ப்பு தெரி​வித்து தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த பொது​மக்​கள் இந்த தேர்​தலில் வாக்​களித்​தனர்.

வாக்​களித்​தவர்​கள் பலர் எங்​கள் போராட்​டத்​துக்குஆதர​வாக இருந்​தவர்​களை ஆதரிக்க வேண்​டும் என்​ப​தற்​காகவே வாக்​களித்​துள்​ளோம் என்​றும் தெரி​வித்​தனர்.

கடந்த மக்​கள​வைத் தேர்​தலின் போது பரந்​தூர் விமான நிலைய திட்​டத்​துக்கு எதிர்ப்​புத் தெரிவிக்​கும் வகை​யில் தேர்​தலைப் புறக்​கணித்​திருந்த மக்​கள், இம்​முறை தங்​கள் நிலைப்​பாட்டை மாற்​றிக்​கொண்டு ஆர்​வத்​துடன் வாக்​குச் சாவடிகளுக்கு வந்​தனர். பலர் நீண்ட வரிசை​யில் நின்று வாக்கு செலுத்​தினர்.

சாதகமான மாற்றம் ஏற்படும் இதுகுறித்து அந்​தப் பகுதி மக்​களிடம் கேட்​ட​போது தங்​கள் போராட்​டத்​தைக் கண்​டு​கொள்​ளாதவர்​களுக்​குப் பாடம் புகட்​ட​வும், தங்​களுக்கு ஆதர​வாகத் தோள் கொடுத்​தவர்​களுக்​குப் பலம் சேர்க்​க​வும் இந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலைப் பயன்​படுத்​திக் கொண்​ட​தாக தெரி​வித்​தனர்.

இது தொடர்​பாக ஏகனாபுரம் கிராமத்​தைச் சேர்ந்த போராட்​டக்​காரர்​கள் கூறும்​போது, “எங்​களது நிலத்​தை​யும் வாழ்​வா​தா​ரத்​தை​யும் பாது​காக்க வேண்​டும் என்​பதே எங்​களது முதன்​மை​யான நோக்​கம். கடந்த முறை தேர்​தலைப் புறக்​கணித்​ததன் மூலம் எங்​களது கோபத்​தைப் பதிவு செய்​தோம்.

ஆனால் இந்த முறை, எங்​களது கோரிக்​கைகளுக்​குச் செவி​சாய்த்து எங்​களுக்கு ஆதர​வாக நின்​றவர்​களுக்கு வாக்​களிக்க வேண்​டும் என்​ப​தற்​காகப் புறக்​கணிப்பு முடிவைக் கைவிட்​டோம்" என்​றனர்.

வாக்களிக்க வந்த மக்கள் பலரும், குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம்தமிழர் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தங்களது போராட்டத்துக்கு உறுதியாக நின்று ஆதரவு அளித்ததாக தெரிவித்தனர்.

புதிய அரசு அமைந்ததும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் தங்களுக்குச் சாதகமான மாற்றம் ஏற்படும் என மக்கள் நம்புகின்றனர். இதுகுறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுச் செயலாளர் சுப்பிரமணி கூறும்போது, “தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதையும், அதன் மூலம் அமையப்போகும் புதிய அரசையும் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

புதிய அரசு அமைந்தவுடன் எங்கள் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, எங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது நடக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.

விமான நிலைய திட்டம்: அச்சத்துக்கு விடிவு பிறக்குமா? - நம்பிக்கையுடன் வாக்களித்த ஏகனாபுரம் மக்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in