எழும்பூர் - கன்னியாகுமரி ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பயணி​கள் வசதிக்​காக எழும்​பூர் - கன்​னி​யாகுமரி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்​களின் சேவை நீட்​டிக்​கப்பட உள்​ளது.

தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் இயக்​கப்​படும் வழக்​க​மான ரயில்​களில் கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்த, சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த சிறப்பு ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் கிடைக்​கும் வரவேற்பை பொறுத்து அவை நீட்டிக்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில், சென்னை எழும்​பூர் - கன்​னி​யாகுமரி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்​களின் சேவை​கள் நீட்​டிப்பு செய்​யப்பட உள்​ளன.

அதன் விவரம்: சென்னை எழும்​பூரில் இருந்து கன்​னி​யாகுமரிக்கு வெள்​ளிக்​கிழமை​களில் இயக்​கப்​படும் சிறப்பு ரயி​லின் (06045) 4 சேவை​களும் (அக்.2 முதல் அக்​.23-ம் தேதி வரை), கன்​னி​யாகுமரி​யில் இருந்து சென்னை எழும்​பூருக்கு ஞாயிற்​றுக்​கிழமை​களில் இயக்​கப்​படும் சிறப்பு ரயி​லின் (06046) 4 சேவை​களும் (அக்.4 முதல் அக்​.24-ம் தேதி வரை) நீட்​டிக்​கப்பட உள்​ளன.

கோவை - ஜெய்ப்​பூர் இடை யே, வியாழக்​கிழமை​களில் இயக்​கப்​படும் சிறப்பு ரயி​லின் (06181) 8 சேவை​களும் (அக்.8 முதல் நவ.26-ம் தேதி வரை), ஜெய்ப்​பூர் - கோவை இடையே ஞாயிற்​றுக்​கிழமை​களில் இயக்​கப்​படும் சிறப்பு ரயி​லின் (06182) 8 சேவை​களும் (அக்​.11 முதல் நவ.29-ம் தேதி வரை) நீட்​டிப்பு செய்​யப்பட உள்​ளன.

தூத்​துக்​குடி​யில் இருந்து நரசாபூருக்கு திங்​கள்​கிழமை​களில் இயக்​கப்​படும் சிறப்பு ரயி​லின் (06019) 9 சேவை​களும் (அக்​.5-ம் தேதி முதல் நவ.30-ம் தேதி வரை), நரசாபூரில் இருந்து தூத்​துக்​குடிக்கு புதன்​கிழமை​களில் இயக்​கப்​படும் சிறப்பு ரயி​லின் (06020) 9 சேவை​களும் (அக்​.7-ம் தேதி முதல் டிச.2-ம்​ தே​தி) வரை நீட்​டிக்​கப்பட உள்​ளன. இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கோப்புப் படம்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகல கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in