“என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” - இபிஎஸ்

“என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்”  - இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட வேண்டும்.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி.தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது. பழனிசாமி இருக்கும் கட்சியில் கூட்டணியில் இருப்பதற்குப் பதில் தூக்கில் தொங்கிவிடலாம் என தே.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், கடும் விமர்சனங்களை முன்வைத்ததை மறந்திருக்க முடியாது.

இந்நிலையில் இன்று, “மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம்” என்று டிடிவியும்; “மரியாதைக்குரிய டிடிவி-யை வரவேற்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

“என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்”  - இபிஎஸ்
“விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை” - என்டிஏ-வில் மீண்டும் ஐக்கியமான டிடிவி தினகரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in