ஸ்டீல் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு

ஸ்டீல் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் தனி​யார் ஸ்டீல் நிறுவனங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.100 கோடி பினாமி சொத்​துகளை அமலாக்​கத் துறை கண்​டறிந்து நடவடிக்கை எடுத்​துள்​ளது.

சென்​னையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் தங்​கம் ஸ்டீல் லிமிடெட் மற்​றும் பி.எஸ்​.கிருஷ்ண​மூர்த்தி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய எஃகு உற்​பத்தி நிறு​வனங்​கள், பாரத் ஸ்டேட் வங்​கி​யில் ரூ.311 கோடி கடன் பெற்று மோசடி செய்​த​தாக புகார் எழுந்​தது.

வங்கி அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு மற்​றும் சிபிஐ ஆகியவை வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்​தின. இதன் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை​யும் வழக்கு பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கியது.

விசா​ரணை​யில், இரு நிறு​வனங்​களின் இயக்​குநர்​களும், 2007 முதல் 2013 வரையி​லான கால​கட்​டத்​தில் போலி​யான நிதி அறிக்​கைகள், போலி குடோன் மற்​றும் போக்​கு​வரத்து ரசீதுகளைக் காட்டி கடன் பெற்​றிருப்​பது தெரிய​வந்​தது.

மேலும், வங்​கிக்கு ஒரு கணக்​கை​யும், நிறு​வனப் பதி​வாள​ருக்கு வேறொரு கணக்​கை​யும் காட்​டி, சுழற்சி முறை வர்த்​தகம் மூலம் பணத்தை போலி நிறு​வனங்​களுக்கு திசை​திருப்பி தனிப்​பட்ட சொத்​துகளை வாங்​கி​யிருப்​பதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதன்​மூலம் பாரத் ஸ்டேட் வங்​கிக்கு சுமார் ரூ.311 கோடி இழப்பு ஏற்​படுத்தி சட்ட விரோத லாபத்​தை​யும் அந்த நிறு​வனங்​கள் சேர்த்​திருப்​பதை அமலாக்​கத் துறை கண்​டிபிடித்​தது.

இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள இந்த நிறு​வனங்​களின் இயக்​குநர்​கள் மற்​றும் அவர்​களுக்கு தொடர்​புடைய 7 இடங்​களில் அமலாக்​கத் துறைஅதி​காரி​கள் நேற்று முன்​தினம் சோதனை நடத்​தினர்.

இந்த சோதனை​யின்​போது, மோசடி பணத்​தில் வாங்​கப்​பட்ட சொத்​துகளை வங்கி ஜப்தி செய்​யாமல் இருக்க, தங்​களது தூரத்து உறவினர்​கள், பினாமிகளின் பெயர்​களில் சொத்​துகளைப் பதிவு செய்​திருந்​ததற்​கான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

இந்த சோதனை​யின் மூலம், பினாமிகளின் பெயர்​களில் உள்ள ரூ.100 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள 43 அசையா சொத்​துகளை அமலாக்​கத் துறை அடை​யாளம் கண்​டுள்​ளது.

மேலும், மோசடி தொடர்​பான டிஜிட்​டல் ஆதா​ரங்​கள், முக்​கிய ஆவணங்​களை​யும் பறி​முதல் செய்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை அதி​காரப்​பூர்​வ​மாக தெரி​வித்​துள்​ளது. இந்த வழக்கு தொடர்​பாக விசா​ரணையை மேலும் தீவிரப்​படுத்​தி​யுள்​ள​தாக அதிகாரிகள் கூறியுள்​ளனர்.

ஸ்டீல் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு
பணி ஆணை வழங்கப்படாததால் டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு 751 மருத்துவர்கள் போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in