சென்னை தீவுத்திடலில் கடை அமைக்க பட்டாசு முகவர் சங்கத்துக்கு இ-டெண்டர்

சென்னை தீவுத்திடலில் கடை அமைக்க பட்டாசு முகவர் சங்கத்துக்கு இ-டெண்டர்
Updated on: 
1 min read

சென்னை: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு சென்னை தீவுத்​திடலில் பட்​டாசு விற்​பனைக்​காக கடைகள் அமைக்க இடம் ஒதுக்​கித்​தர உத்​தர​விடக் கோரி, சென்னை பட்​டாசு முகவர்​கள் நலச்​சங்​கத்​தின் செயல் தலை​வ​ரான நடராஜன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆஷா முன்​பாக மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்​பில் இ-டெண்​டர் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதில், அக்.23-ம் தேதி டெண்​டர்​கள் திறக்​கப்​பட்​ட​தாகவும், 2 டெண்​டர்​கள் மட்​டுமே சமர்ப்​பிக்​கப்​பட்டு, அதில் சென்னை பட்டாசு முகவர்​கள் நலச்​சங்​கத்​துக்கு இ-டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ள​தாகவும் தெரி​விக்​கப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து தீபாவளி பண்​டிகை நெருங்கி வரு​வ​தால், தீவத்​திடலில் பட்​டாசு கடைகள் அமைப்​பது தொடர்​பாக, டெண்​டர் ஒதுக்​கீட்டு உத்​தரவு​களை உடனே வழங்க வேண்​டும் என, தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்சி கழகத்​துக்கு உத்​தர​விட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்​தார்.

சென்னை தீவுத்திடலில் கடை அமைக்க பட்டாசு முகவர் சங்கத்துக்கு இ-டெண்டர்
‘அர்னாப்’ புயலால் 12 விமானங்கள் ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in