சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய இ-பைக் வாடகை சேவை தொடக்கம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய இ-பைக் வாடகை சேவை தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, முதன் முறையாக இ-பைக் (மின்சார இருசக்கர வாகனம்) வாடகை சேவையை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான நகர்ப்புற போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இ-பைக் வாடகை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை சென்னை ரயில்வே கோட்டத்தின் கூடுதல் ரயில்வே மேலாளர் ஐ.செந்தில்குமார் இன்று (செப்.17) வியாழக்கிழமை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

20 மின்சார பைக்குகள்

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக, இந்த மையத்தில் தற்போது 20 இ- பைக்குகள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகள் இந்த இ- பைக்குகளை வாடகைக்கு எடுக்கலாம். இது, வாகனச் செலவுகளைச் சார்ந்திருக்காமல், சிக்கனமான பயணத்தை உறுதிசெய்கிறது.

சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தினசரி வேலைக்குச் செல்வோர் மற்றும் பிற ஊர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகக் குறைந்த கட்டணத்தில், எளிதான போக்குவரத்துத் தேர்வாக அமையும். இத்திட்டம் 3 ஆண்டுகால பயணிகளின் கட்டணம் அல்லாத பிறவருவாய் ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.7.17 லட்சம் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய இ-பைக் வாடகை சேவை தொடக்கம்
சென்னை மெரினா மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து - பாதிப்பு இல்லை என விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in