மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

ரொக்கம், ‘ஜி-பே’ பரிமாற்றம் உட்பட ரூ.58 லட்சம் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக நகரமைப்புப் பிரிவில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக நகரமைப்புப் பிரிவில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

Updated on
2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் மாநக​ராட்​சி, நகராட்​சி, பேரூ​ராட்​சி, வட்​டார வளர்ச்சி அலு​வல​கங்​கள் என 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் ஒரே நேரத்​தில் நடத்​திய சோதனை​யில், கணக்​கில் வராத பணம் ரூ.58 லட்சம் கைப்​பற்​றப்​பட்​டது. ஆன்​லைன் பணப் பரிவர்த்​தனை தொடர்​பான ஆவணங்​களும் சிக்​கின.

பொது​மக்​களுக்கு வழங்​கப்​படும் அரசு சேவை​களுக்கு நிர்​ண​யிக்​கப் ​பட்ட கட்​ட​ணங்​களை மட்​டுமே வசூலிக்க வேண்​டும் என்ற விதிமுறை இருந்​தா​லும், சில அலு​வல​கங்​களில் பல்​வேறு சேவை​களுக்கு லஞ்​சம் கேட்​கப்​படு​வ​தாக தொடர்ந்து புகார்​கள் எழுந்து வந்​தன. குறிப்​பாக, கட்​டிட வரைபட அனு​ம​தி, சொத்து வரி பெயர் மாற்​றம், வரி மதிப்​பீடு மாற்​றம், குடிநீர் மற்​றும் பாதாள சாக்​கடை இணைப்​பு, தொழில் உரிமம் வழங்​குதல் மற்​றும் புதுப்​பித்​தல், பிறப்பு - இறப்பு பதிவு​களில் திருத்​தம், ஆக்​கிரமிப்பு தொடர்​பான நடவடிக்​கைகள், அரசு ஒப்​பந்​தப் பணி​களுக்​கான பில் ஒப்​புதல், சாலை, வடி​கால், தெரு​விளக்கு உள்​ளிட்ட வளர்ச்​சிப் பணி​களுக்​கான ஒப்​பந்​தங்​கள், அரசு வீடு திட்ட பயனாளி​கள் ஒப்​புதல், சுயஉதவிக் குழு திட்​டங்​கள், கிராம பஞ்​சா​யத்து நிர்​வாக அனு​ம​தி​கள், அரசு நலத்​திட்​டங்​களில் பெயர் சேர்த்​தல் உள்​ளிட்ட பணி​களுக்கு லஞ்​சம் பெறப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.

பணம் கொடுக்​காதவர்​களின் கோப்​பு​கள் வேண்​டும் என்றே தாமதம் செய்​யப்​படு​வ​தாக​வும், சில நேரங்​களில் காரணமின்றி நிராகரிக்​கப்​படு​வ​தாக​வும் ​மக்​கள் புகார் தெரி​வித்​தனர்.

50-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள்: இந்த புகார்​கள் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​ துறை இயக்​குநரும், கூடு​தல் டிஜிபி​யு​மான அருண், மாநிலம் முழு​வதும் ஒருங்​கிணைந்த சோதனை நடத்த உத்​தர​விட்​டார். இதையடுத்து 50-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. நாள் முழுக்க வசூலாகும் தொகை மாலை நேரத்​தில் அதி​காரி​களிடம் அதி​கம் இருக்​கும் என்​ப​தால், நேற்று அலு​வல​கப் பணி முடி​யும் நேரத்​தில் திடீரென போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

தமிழகம் முழு​வதும் மாநக​ராட்​சி, நகராட்​சி, வட்​டார வளர்ச்சி அலு​வல​கங்​கள் என 41 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்​தில் நடை​பெற்​றது. சென்னையில் கோடம்பாக்கம், திருவிக நகர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயபுரம், பெருங்குடி ஆகிய 6 மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி மாநக​ராட்சி 4-வது மண்டல அலு​வல​கம், கோவை மாநக​ராட்சி மத்​திய மண்டல அலு​வல​கம், தாம்​பரம், புதுக்​கோட்​டை, கரூர், கும்​பகோணம், திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, திரு​வண்​ணா​மலை, காரைக்​குடி மாநக​ராட்​சிகள், மயி​லாடு​துறை, திரு​வாரூர், நாகப்​பட்​டினம், அரியலூர், தென்​காசி, கன்​னி​யாகுமரி, தரு​மபுரி, திருச்​செங்​கோடு, பேரணாம்​பட்​டு, திருப்​பத்​தூர், வாலாஜா, போடி, ராம​நாத​புரம், கள்​ளக்​குறிச்​சி, திருத்​தணி நகராட்​சிகள், தாடிக்​கொம்​பு, ஊத்​துக்​குளி, கடலூர் - மேல்​பட்​டாம்​பாக்​கம் பேரூ​ராட்​சிகள் உள்​ளிட்ட பல இடங்​களில் சோதனை நடை​பெற்​றது. பல அலு​வல​கங்​களில் இரவு வரை சோதனை நீடித்​தது.

தூத்​துக்​குடி மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் இருந்து ரூ.7.50 லட்​சம், திருநெல்​வேலி மாநக​ராட்சி அலு​வல​கத்​தில் ரூ.97,600, தென்​காசி நகராட்சி அலு​வல​கத்​தில் ரூ.43,160 கைப்​பற்​றப்​பட்​டன. ராஜ​பாளை​யம் நகராட்சி அலு​வல​கத்​தில் நகரமைப்பு ஆய்​வாளர் காளீஸ்​வரி​யிடம் இருந்து ரூ.2 ஆயிர​மும், ஓய்வு பெற்ற அலு​வலக உதவி​யாளர் பாண்​டியனிடம் இருந்து ரூ.4 ஆயிர​மும் பறி​முதல் செய்​யப்​பட்​டதாக கூறப்படுகிறது.

'ஜி-பே' பரிவர்த்​தனை​களும் ஆய்வு: சோதனை​யின்போது பல அலு​வல​கங்​களில் கணக்​கில் வராத ரொக்​கப் பணம் மட்​டுமின்​றி, ‘ஜி-பே’ உள்​ளிட்ட டிஜிட்​டல் முறை​களில் பணம் பரி​மாறப்​பட்​டதற்​கான ஆதா​ரங்​களும் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன.

மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​தில் நடந்த சோதனை​யில், பெண் பொறி​யாளரின் வங்​கிக் கணக்​குக்கு ‘ஜி-பே’ மூலம் வந்​த​தாக கூறப்​படும் ரூ.1.50 லட்​சம் பரிவர்த்​தனை தொடர்​பான தகவல்​கள் கண்​டறியப்​பட்​டன. அங்​கிருந்த பிற ஊழியர்​களிடம் இருந்து ரூ.23,500 ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

செல்​போன்​கள், வங்கி பரிவர்த்​தனை விவரங்​கள், கணக்கு புத்​தகங்​கள் மற்​றும் முக்​கிய ஆவணங்​களை​யும் லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் ஆய்வு செய்து வரு​கின்​றனர். நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ரூ.31.21 லட்சம், ‘ஜி-பே’ பரிவர்த்தனை மூலம் ரூ.26.71 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறி​முதல் செய்​யப்​பட்ட பணத்​துக்​கான உரிய ஆவணங்​கள், பணம் பெற்​றதற்​கான காரணம், டிஜிட்​டல் பரிவர்த்​தனை​களின் தன்மை குறித்து அதி​காரி​களிடம் தொடர்ந்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சோதனை​யின் அடிப்​படை​யில், முறை​கேடு​கள் உறுதி செய்​யப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள், ஊழியர்​கள் மீது அடுத்​தகட்ட சட்ட நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என்​று லஞ்​ச ஒழிப்​புத்​ துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

<div class="paragraphs"><p>விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி அலுவலக நகரமைப்புப் பிரிவில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறையினர்.</p></div>
கோயில் முறைகேடுகள் குறித்து மின்னஞ்சலில் புகார் தரலாம்: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in