போலி புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு: கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெரியார் அறிவுலகம். அடுத்த படம்: 3-வது தளத்தில் இயங்கி வரும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார். படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெரியார் அறிவுலகம். அடுத்த படம்: 3-வது தளத்தில் இயங்கி வரும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார். படங்கள்: ஜெ.மனோகரன்

Updated on: 
1 min read

கோவை: போலி புத்​தகங்​கள் கொள்​முதலில் நடந்த முறைகேடு தொடர்​பாக, கோவை பெரியார் அறி​வுல​கத்​தில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர்.

கோவை காந்​திபுரம் நஞ்​சப்பா சாலை​யில், ரூ.300 கோடி மதிப்​பில் பெரியார் அறி​வுல​கம் எனப்​படும் நூல​கம் மற்​றும் அறி​வியல் மையம் கட்​டப்​பட்டு, கடந்த மாதம் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டது. தரைத்​தளம் மற்​றும் 7 தளங்​களு​டன் கூடிய இந்த வளாகத்​தில் நூல​கங்​கள், அறி​வியல் கட்​டமைப்​பு​களு​டன் கூடிய வளாகங்​கள், கூட்​டரங்​கு​கள் ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில், பெரியார் அறி​வுல​கத்​தில் அகல்​விளக்கு மற்​றும் பீனிக்ஸ் பதிப்​பகத்​தின் பெயர்​களில், செயற்கை நுண்​ணறிவு மூலம் தயாரிக்​கப்​பட்ட போலி நூல்​கள், அதிக விலைக்கு கொள்​முதல் செய்து வைக்​கப்​பட்​டுள்​ள​தாக புகார்​கள் எழுந்​தன.

7 பேர் குழு: இதையடுத்து கோவை பெரியார் அறி​வுல​கத்​தின் 4-வது தளத்​தில் உள்ள தமிழ் நூல்​கள் பிரிவு, 5 மற்​றும் 6-வது தளங்​களில் உள்ள ஆங்​கில நூல்​கள் பிரிவு ஆகிய இடங்​களில் வைக்​கப்​பட்​டிருந்த மேற்​கண்ட பதிப்​பகங்​களின் 1,800 புத்​தகங்​கள் இங்​கிருந்து அகற்​றப்​பட்​டன.

இந்த விவகாரம் தொடர்​பாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்​றும் ஊழல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். நேற்று பெரியார் அறி​வுல​கத்​தில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர்.

டி.எஸ்.பி. இமானுவேல் ஞான​சேகரன் தலை​மையில் இன்ஸ்​பெக்​டர்​கள், போலீ​ஸார் என மொத்​தம் 7 பேர் கொண்ட அதி​காரி​கள் குழு​வினர் காலை 11 மணிக்கு பெரியார் அறி​வுல​கத்​துக்கு வந்​தனர். அறி​வுல​கத்​தின் 3-வது தளத்​தில் உள்ள நிர்​வாகப் பிரிவு அலு​வல​கத்​துக்​குச் சென்று அறைக்​கதவை மூடினர். வெளியாட்​கள் யாரும் உள்ளே அனுமதிக்​கப்​பட​வில்லை.

4 மணி நேரம்: போலி புத்​தகங்​கள் கொள்​முதல் செய்​யப்​பட்​டது தொடர்​பான ஆவணங்​கள், இங்கு கொண்டு வரப்​பட்ட தேதி, புத்​தகங்​களை வாங்கி ரேக்​கு​களில் வைக்​கப்​பட்ட பணிகள் தொடர்​பான ஆவணங்​கள் உள்​ளிட்ட அனைத்து ஆவணங்​களை​யும் போலீ​ஸார் சேகரித்​தனர். தொடர்ந்து 4 மணி நேரம் நடந்த சோதனை மதி​யம் 3 மணிக்கு நிறைவடைந்​தது. சோதனை தொடர்​பாகவும், பறி​முதல் செய்​யப்​பட்ட ஆவணங்​கள் தொடர்​பாகவும் கருத்து தெரி​விக்க போலீ​ஸார் மறுத்​து​விட்​டனர்.

<div class="paragraphs"><p>கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெரியார் அறிவுலகம். அடுத்த படம்: 3-வது தளத்தில் இயங்கி வரும் நிர்வாகப் பிரிவு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார். படங்கள்: ஜெ.மனோகரன்</p></div>
கந்தசஷ்டி விழாவில் தமிழுக்கு முதன்மை இடம்: அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தல்

X