கனிமங்கள் திருத்த சட்டம் தொடர்பாக சட்ட நடவடிக்கை: தமிழக அரசுக்கு துரை வைகோ வலியுறுத்தல்

துரை வைகோ | கோப்புப் படம்

துரை வைகோ | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து மாநிலங்களையும் பாதிக்கக்கூடிய சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டில் பூவியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் கிட்டத்தட்ட ரூ.4,395 கோடி வருவாய் தமிழக அரசுக்கு கிடைத்தது. இதில் ரூ.2,225 கோடி கனிமங்களை தாங்கும் நிலங்கள் மீதான வரி மூலம் கிடைத்தது. இந்த மசோதாவில், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாநிலமும் கனிமங்கள் குறித்த எந்த ஒரு வரியையும் இனி விதிக்க முடியாது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து இது மாநிலங்களை பெரும் பாதிக்கும், மாநில சுயாட்சிக்கு எதிரானது என கூறினோம். ஆனால் திடீரென இரு அவைகளிலும் எந்த விவாதமும் இல்லாமல் மசோதாவை நிறைவேற்றினர்.

இதுகுறித்து தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனை சந்தித்து மாநிலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தேன். ஏற்கெனவே கடுமையான நிதி பற்றாக்குறை உள்ள நிலையில். கனிமங்கள் போன்ற சில ஆதாரங்கள் மூலம்தான் நமக்கு நிதியே கிடைக்கிறது. தற்போது இந்த சட்டத்தால், எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் மத்திய அரசை சார்ந்திருக்கக்கூடிய நிலை ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>துரை வைகோ | கோப்புப் படம்</p></div>
தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக பதிவிட்ட கோவை இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in